நட்ஸ் பருப்பு வகைகளை அளவோடு சாப்பிடுவதே ஆரோக்கியம் :-
வேர்க்கடலை :
=> கோலின், புரதம், கொழுப்பு, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் என சத்துக்கள் அதிகம் உண்டு. மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
=> வளரும் குழந்தைகள், உடல் மெலிந்தவர்கள், கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.
=> சைவம் சாப்பிடுபவர்கள் 30 கிராமும், அசைவம் சாப்பிடுபவர்கள் 20 கிராமும் தினமும் எடுத்துக்கொள்ளலாம்.
=> வயதானவர்களுக்கு 15 கிராம் போதுமானது.பச்சை வேர்க்கடலை ஜீரணம் ஆகாது. வறுத்து அல்லது வேகவைத்து சாப்பிடலாம்.
=> வேர்க்கடலையில் முளைவிட்ட பகுதி கருப்பாக இருந்தால், அதில் நச்சுக்கள் அதிகம் இருக்கும். அதை அப்படியே வேகவைத்துச் சாப்பிடும்போது , கல்லீரல் பாதிக்கக்கூடும்.
பாதாம் பருப்பு :
=> கெட்டக் கொழுப்பைக் குறைக்கக்கூடிய ஆற்றல் இதற்கு அதிகம். புரதம், கொழுப்பு நிறைய சத்துக்கள் இதில் உள்ளன.
=> குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் 5 பாதாம் சாப்பிடலாம்.
=>பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், எடை குறைந்தவர்கள் பாலுடன் கலந்து பருகலாம்.
=> சர்க்கரை நோயாளிகள் மட்டும் 2 பாதாமை இரவே வெந்நீரில் ஊறவைத்து மறுநாள் சாப்பிடலாம்.
=> அதிக எனர்ஜி தேவைப்படுபவர்கள், கூடுதலாகச் சாப்பிட்டாலும் தப்பில்லை.
முந்திரிப் பருப்பு :
=> கொழுப்பு மிக அதிகமாக இருக்கிறது. வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகம் இருந்தாலும் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது.
=> வயதானவர்களுக்குத் தேவையே இல்லை. உடலுக்குப் புரதச் சத்து தேவைப்படுபவர்கள், உடல் எடை குறைந்தவர்கள், வளரும் பிள்ளைகள் தினமும் 3 சாப்பிடலாம்.
=> நெய்யில் வறுத்து சாப்பிடும்போது, உடலில் கொழுப்பு அதிகரித்து இதயப் பிரச்னையைக் கொண்டுவரும்.
இதய நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வ& #3015;ண்டாம்.
இதிலுள்ள சத்துக்கள் நம் அன்றாட இயற்கை உணவிலேயே இருப்பதால், பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.
BGVENKATESH