அனுபவமும் உணர்தலும் – பாகம் 1

அனுபவமும் உணர்தலும் – பாகம் 1

நம் சன்மார்க்கத்திலும் சரி  எந்த ஒரு சமயத்திலும் சரி இந்த கேள்வி வரும்

இப்போது நிறைய பேர்
” நானே பரப்பிரம்மம் – நான் அவன் தான் ”
” நான் உலகத்தை நடத்துபவன் ”
என்றெல்லாம் எழுதி வருகின்றார்கள்

இது வேதாந்த வாக்கியங்களை  இறுமாப்புடன் கூறுவதற்குச் சமம்

வேத ரிஷிகள் அனுபவித்த பிறகு அவ்வாக்கியங்களை கூறினார்கள் – அவர்களுக்கு பொருந்தும்

கேட்டால் நான் உணர்ந்து இருக்கின்றேன் என்கிறார்கள் – அதனால் எழுதி வருகிறேன்  என்கிறார்கள்.

அது எப்படி மூன்று மலம் உடைய ஒரு ஜீவன் – நிர்மலமான சிவத்திற்கு நிகர் ஆக முடியும் ??
மலம் நீங்கி சுத்தம் ஆனால் சிவத்திற்கு நிகர் ஆக முடியும் – அப்படி எதுவும் செய்யாமல் நான் பிரம்மம் என்று கூறுவது நகைப்பிற்குரியது

இவர்கள் எல்லோரும் வள்ளலார் பதிப்பித்த ” ஒழிவில் ஒடுக்கம் ” என்னும் ஞான நூலை பல முறை படிக்க வேண்டும் – படித்தால் தாங்கள் எந்த நிலையில் இருக்கின்றோம் என்று தெரிந்து கொள்வார்கள்

சன்மார்க்கிகள் அதி புத்திசாலிகள் – அதி மேதாவிகள் – ஆறாம் திருமுறை தவிர வேறு எதுவும் படிக்க மாட்டார்கள்
முதல் 5 திரு முறைகள் சமயம் சார்ந்தது – திருமந்த்ரம் – திருவாசகம்  சமயம் சார்ந்தது – அதை ஒதுக்கி விடுவார்கள்

இவர்கள் – கிணற்றுத் தவளைகள் – குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள்

ஒருவர் ஒரு படி மேலே போய்  – வள்ளலார் Space   இணையதளத்தில்
“எனக்கும் அவனுக்கும் ஒரு பேதமும் இல்லையே” என்று உளறல் வேறு

உணர்தலால் ஒரு பயனும் இன்று – நான் உணர்ந்து விட்டேன் என்று கூறிக்கொண்டிருப்பதனாலும்
ஒரு பயனும் இன்று

நாம் எல்லோரும் சாதனம் பயின்று – கொஞ்சம் கொஞ்சமாக அனுபவத்திற்கு வர வேண்டும் – பின் அந்த அனுபவம் முதிர வேண்டும் – நாம் நல்ல நிலைக்கு வருவோம் அதன் பயனாக

அனுபவம் தான் வேண்டும் – உணர்தல் அல்ல என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s