ஆன்மாவும் அருட்பெருஞ்சோதியும்

ஆன்மாவும் அருட்பெருஞ்சோதியும்

நான் எந்த சன்மார்க்கியை கேட்டாலும் – சத்திய ஞான சபையில் காட்டப்படும் ஜோதி – அருட்பெருஞ்சோதி என்றே கூறுகின்றனர் – உண்மையை அறியாமலே

அந்த ஜோதி ஆன்ம ஜோதியே அன்றி அருட்பெருஞ்சோதி அன்று

பின் நீங்கள் எதனை அடைய விரும்புகிறீர்கள் என்று கேட்டால் –  அருட்பெருஞ்சோதி என்று தான் பதில் வருமே அல்லாது  வேறு வராது

அதற்கு வழி என்று கேட்டால் ஜீவகாருண்யம் – அன்ன தானம் – என்று தான் கூறுகின்றார்களே அல்லாது
வேறு பதில் வராது

அருட்பெருஞ்சோதியை அடைய ஒரே வழி ஆன்மாவை அடைவது தான் என்று சன்மார்க்கிகளுக்கு  தெளிவில்லை

ஏனெனில் ” அருட்பெருஞ்சோதி இருப்பது ஆன்மாவிற்குள் ”
அவர் ஆன்மாவினுள் அணுவைக் காட்டிலும் நுண்மையாக இன்னும் அதி நுண்மையாக தன்னை சுருக்கியும் ஒளித்தும் வைத்துள்ளார்

எனவே நெற்றிக் கண்ணைத் திறந்து ஆன்ம அனுபவம் பெற்று – அதன் துணை கொண்டு தான்
அருட்பெருஞ்சோதியை தரிசிக்க முடியுமே அல்லாது வேறு எந்த வழியினாலும் முடியாது என்பது உறுதி

ஆன்மாவினால் தான் அருட்பெருஞ்சோதியை அடைய முடியும்

ஆன்மாவினால் ( நெற்றிக்கண் திறப்பு )  தான் உருவமில்லாததை காண முடியும் –  அப்படிப்பட்ட
அருட்பெருஞ்சோதியை கண்ணால் கண்டு அனுபவித்து அடைய முடியும்

ஆன்மா – அதன் அனுபவம் வேண்டும் என்று எந்த சன்மார்க்கியும் விரும்புவதில்லை – எடுத்த உடன்
அருட்பெருஞ்சோதி தான் வேண்டும்

இது எப்படி இருக்கின்றது என்றால்

+2 கூட தேறாமல் – முது கலை பட்டம் / டாக்டர் படிப்பிற்கு ஆசைப் படுவதற்கு சமம் – இது நடைமுறையில் நடவாது

தான் வள்ளலார் மாணவன் – அப்பன் – தகப்பன் என்றெல்லாம் கூறிக்கொண்டு இணைய தளத்தில் / முக நூலிலும் உலா வருகின்றனர்

இவர்கள் வள்ளலாரின் விசிறிகளே – இவரை பார்த்து வாய் பிளக்கிறார்களே தவிர – தான் எப்படி வள்ளலார் அடைந்த நிலை அடைவது என்று யோசிப்பதில்லை – அந்த இலட்சியம் – கனவு  இல்லை –அதனால் இவர்கள் அறிவு வளராமல் அப்படியே இருக்கின்றது

தான் வள்ளலார் மாணவன் என்று கூறிக் கொண்டு சில சாதுக்கள் மலேஷியா சிங்கப்பூர் நாடுகளில் தான் கற்ற / தவறாக  புரிந்து கொண்டவற்றை அங்கு சொல்லிக் கொடுக்கின்றனர் – பாவம் அம்மக்கள்.
இவர்கள் வள்ளலாரை வைத்து பிழைப்பு நடத்துகின்றார்கள்.

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s