அருள் செயல்பாடு
அகவல் வரிகள்
அருளன்றி அணுவும் அசைந்திடாது அதனால்
அருள் நலம் பெற முயல்க என்ற சிவமே
உலக நடப்புகள் – நிகழ்வுகள் – நம் வாழ்வின் நிகழ்வுகள் – நமக்கு பிடிக்குமோ – பிடிக்காதோ எல்லாம் அருளின் ஆணைப்படி – இச்சைப்படி நடக்கின்றன என்பது உண்மை
அருள் இச்சைப்படி தான் ஒரு நாட்டில் போரும் , ஒரு நாட்டில் உணவுப் பஞ்சம் – இனப் போர் – எல்லாம் நடகின்றது
ஆப்பிரிக்கா சோமாலியாவில் தினமும் ஆயிரக் கணக்கான பேர் ( உணவுப் பஞ்சம் ) மடிகின்றார்கள் – அதுவும் அருள் இச்சைப்படி தான் நடக்கின்றது – நம்மால் ஒன்றும் செய்ய முடியாது – ஆண்டவரிடம் காப்பாற்று என்று விண்ணப்பிக்க முடியுமே அல்லாது வேறு ஒன்றும் செய்ய முடியாது
எல்லாம் சிவ மயம் என்று வாழ வேண்டும் – நம்மால் எது முடியுமோ அதைச் செய்யலாம் – அவ்வளவு தான் – மற்றதெல்லாம் அவன் அருள் கையில்
அருள் தான் எல்லாவற்றையும் நடத்துகின்றது – ஆக உலகத்தில் அருளாட்சி தான் நடந்தேறி வருகிறது
ஒரு சாதகன் – அவனுடைய கர்மா – பக்குவம் – தகுதி எல்லாவற்றையும் ஆய்ந்து அவனுக்கு என்ன நிலைக்கு கூட்டிச் செல்ல வேண்டுமோ அதற்கு கூட்டிச் செல்லும்
நமக்கு என்ன தகுதியோ அது நமக்கு கொடுப்பது அருள் தான்
நமக்கு பெரிய பெரிய சன்மார்க்க அனுபவங்கள் சித்தி – கைவல்யம் ஆக வேண்டுமெனில் அதற்கு அருள் தான் நம்மை அழைத்துச் செல்ல வேண்டும்
அருள் தான் நமக்கு வேகாக்கால் அனுபவம் சித்திக்க வைத்து திருச்சிற்றம்பலப் பிரவேசம் நடத்த வேண்டும் – முத்தேக சித்தி – மரணமிலாப் பெருவாழ்வு அளிக்க வேண்டும்
மொத்தத்தில் அருள் தான் சன்மார்க்கத்துக்கு அடிப்படை
வெங்கடேஷ்
இந்த உலகில் இந்த பதிவுகள் படிப்பதற்கு கூட அருள் இருக்கும் ஆன்மா உள்ள விழிகள் படிக்கும் அதில் சில விழிப்புணர்வு பெறும் நன்றி அண்ணா
LikeLike
உண்மையாக சத்தியமாக
LikeLike