அனுபவம் – ஒன்றா வெவ்வேறா ??
நான் இதனை பற்றி கேட்டால் – ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி அனுபவம் அமையும் என்று கூறுகின்றனர்
அவரவர் வினை வழி அவரவர் வந்தனர்
அவரவர் வினை வழி அவரவர் அனுபவம் என்பர்
இது தவறான எடுத்துக்காட்டு ஆகும்
ஒரு சில அனுபவங்கள் எல்லா ஞானியரும் கூறி இருப்பர்
சும்மா இருக்கும் சுகம்
ஒத்த இடம்
நாய்க்கு தவிசிட்டு
தச நாதங்கள்
சுழிமுனை திறப்பு
அமுதம் சுரப்பு
சித்திகள்
திருவடி – கண்மணி
நெருப்பாறு – மயிர்ப்பாலம்
ஆன்ம தரிசனம்
மலக் கழிவு – திரைகள் நீக்கம்
அப்படி இருக்க , ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி அனுபவம் அமையும் என்று கூறுவது தவறு
நாம் சன்மார்க்கத்தின் வழி சென்றால் , வள்ளலாருக்கு வாய்த்த அனுபவங்கள் எல்லாம் நமக்கும் வர வேண்டும் – அப்போது தான் நாம் சரியான பாதையில் செல்கின்றோம் என்று பொருள்.
அப்படி வரவில்லையெனில் – நாம் எங்கோ தவறாக செல்கின்றோம் என்று அர்த்தம் ஆகும்
வெங்கடேஷ்