வள்ளலார் அடைந்த நிலை அடைய சிறந்தது இல்லறமா – துறவறமா ??
வள்ளலார் ஒரு பிறப்பில் முத்தேக சித்தி – மரணமிலாப் பெருவாழ்வு – ஞான சித்திகள் – எல்லாம் அடைந்து விட்டார் – ஆனால் அதற்கு பல பிறவிகளில் தவம் செய்து , அதன் விட்ட தொட்ட குறைகள் – பலன் எல்லாம் சேர்ந்து ஒரு பிறவியில் எல்லாம் அடைந்து விட்டார்.
நாம் இதை செய்ய என்ன செய்ய வேண்டும் ??
நாமும் தவம் செய்ய வேண்டும் – அது குடும்ப வாழ்க்கையில் இருந்தால் மிகவும் சிரமம் – தவம் செய்ய நேரம் கிடைப்பது மிக அரிதாக உள்ளது
நாம் குறைந்த பட்சம் 10- 12 மணி நேரம் தவம் செய்தால் தான் நல்ல நிலைக்கு – நல்ல அனுபவத்துக்கு வர முடியும் – அப்போது கூட நமக்கு என்ன கிடைக்கும் ( முத்தேக சித்தி – மரணமிலாப் பெருவாழ்வு – ஞான சித்திகள் ) என்பது உறுதியாகத் தெரியாது
10- 12 மணி நேரம் தவம் என்பது குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே செய்வது என்பது சாத்தியமே இல்லை
பின் வேலை – சம்பாத்தியம் – குடும்பம் எப்படி நடத்துவது ??
யாருக்கு குடும்பம் – வேலை – மற்ற எந்த வித தடைகள் – தொந்தரவுகள் இல்லாத வாழ்வு அமைகிறதோ அவர்களுக்கு இது சாத்தியம்
இம்மாதிரி வாழ்வு அமைந்தால் தான் நலம் – கொடுப்பினை
அகவலில் – அருளே நம் தொழில் – வள்ளலார்
நம் வாழ்க்கையை இதற்கு அர்ப்பணித்து விட வேண்டும் – அப்போது தான் நல்ல நிலைக்கு அனுபவத்துக்கு வர முடியும் – இல்லையென்றால் ஆன்மா – அருட்பெருஞ்சோதியை மறந்து விட வேண்டியது தான்
நம் எண்ணம் -சொல் – செயல் எல்லாம் ஆன்மா – அருட்பெருஞ்சோதி என்று இருக்க வேண்டும்
ஒரு கால் குடும்பம் – மறு கால் ஆன்மா – அருட்பெருஞ்சோதி என்று இருந்தால் காரியம் நடவாது
வெங்கடேஷ்