மெய்யருள் வியப்பு – 39 விளக்கம்
1 பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம் தன்னையே
பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே ( 31 )
இந்தப் பாடலில் சாகாக்கல்வி தனக்கு APJ ஆண்டவர் தெரிவித்ததை விளக்குகிறார்
பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் – உயிரை உடம்பில் சேர்க்கும் வழியையும்
பிண்டம் தன்னையே பிரியும் வகையும் – உடலை விட்டு உயிர் பிரியும் வழியும்
பிரியா வகையும் – உடலை விட்டு உயிர் பிரியாதிருக்கும் வழியும் தனக்கு ஆண்டவர் தெரிவித்தார் என்று பாடுகின்றார்.
இதில் சாகாக்கல்வி அடங்கி இருக்கின்றது
வெங்கடேஷ்