ஆன்மாவின் கடமை – பாகம் 2

ஆன்மாவின் கடமை – பாகம் 2

பாரதப் போர் முடிந்துவிட்டது

கண்ணன் பார்த்தனிடம் தேரை விட்டு இறங்கச் சொல்கின்றான்
ஏன் ஏன்று அவன் கேட்க , கண்ணன் ” சொன்னதைச் செய் ” என்கின்றான்

பார்த்தனும் அவ்வாறே செய்ய, உடனே தேர் தீப்பற்றி எரிந்துவிடுகின்றது

அவன் அதிர்ந்து போய் என்ன இது என்று கேட்க
உன் எதிரிகள் விட்ட அம்பின் உஷ்ணம் எல்லாம் இந்த தேரில் இருந்தன – நான் தான் உன்னை அந்த உஷ்ணத்தில் இருந்து காப்பாற்றி வந்தேன் என்று கூறுகின்றான்

நான் இருக்கும் வரையில் தீ பற்றி எரியாது

அதனால் உன்னை முதலில் தேரை விட்டு இறங்கச் செய்தேன் என்று விளக்குகின்றான்

இதில்
கண்ணன் = ஆன்மா
ஆன்மாவுக்கு ஜீவனை காக்கும் கடமை – பொறுப்பு உள்ளது என்பதனை இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகின்றது

நாம் ஆன்மாவை தக்க சாதனம் மூலம் விழிப்படையச் செய்தால் , அது நமக்கு பல உதவிகள் – சகாயம் புரியும் – துஷ்ட வினைகளில் இருந்து நம்மை விடுவிக்கும்

நம் தகுதிக்கேற்ப – நம் சாதனையின் உயரத்துக்கு ஏற்ப அதன் உதவிகளின் உயரம் இருக்கும்

உலகத்தவர் ” கிருஷ்ண பரமாத்மா ”  என்றே கூறி பழகி விட்டனர் – உண்மையில் கண்ணன் ஆன்மா தான் – பரமான்மா அல்ல

” கண்ணனும் காணரிய திருப்பாதம் ” – ஒழிவில் ஒடுக்கம்
திருவடிகள் திருச்சிற்றம்பலத்தில் உள்ளன

ஆன்மா – 12 வது நிலை – துவாதசாந்த வெளி
பரமான்மா ( அருட்பெருஞ்சோதி )- 17வது நிலை – சுத்த சிவ துரியாதீதம் – பேரின்ப சுக வெளி

ஆன்மா பரமான்மாவாக உருமாற பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் – ஆணவ மலம் நீங்கினால் அது சுத்த சிவமாக மாறிவிடும் – அவ்வளவு தான்
ஆன்மாவுக்கு ஆணவ மலம் மட்டும் தான் குறை – மற்ற படி அது சுத்த சிவத்துக்கு நிகரனாது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s