ஆன்மா – பரமான்மா புணர்ச்சி
ஜீவன் ஆன்மாவுடன் புணர்ந்த பிறகு தான் ஜீவான்மா என்ற பெயர் பெறுகின்றது
ஜீவன் தனி – ஆன்மா தனியாக இருக்கின்றது
அந்த ஜீவான்மா ஆனது பரமான்மாவுடன் புணர்ந்த பிறகும் , நான் பரமான்மாவுடன் சேர்ந்து இருக்கின்றேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் – அப்போதும் தன் இருப்பை விடவில்லை அது
இதனை ஒழிவில் ஒடுக்கம் – எப்படி ஒரு கோழி தன் பிறவி குணமாகிய குப்பையை தன் காலால் கிளறிக் கொண்டே இருக்குமோ , அது போல் ஆன்மாவும் தன் ஆணவ மலத்தால் , சிவத்திடம் கலந்த போதும் , நான் சிவத்திடம் கலந்திருக்கின்றேன் என்று எண்ணும்
ஆன்மாவுக்கு நான் நான் என்ற ஆணவ மலம் நீங்க வில்லை
சத்தினிபாதம் – அருள் வந்து ஆன்மாவில் உட்கார்ந்து கொள்ள அதன் ஆணவ மலம் நீங்கி , அது சிவத்திற்கு சமமாகும் –
சிவத்துடன் இரண்டறக் கலக்கும்
வெங்கடேஷ்