மன அழுத்தம் நீங்க ஒரு வழி

மன அழுத்தம் நீங்க ஒரு வழி தினம் 15 நிமிடம் – நாம் நமக்கு நாமே பேசிக்கொள்ள வேண்டும் – மனம் விட்டு உளற வேண்டும் – கண்டதை பேச வேண்டும் இப்படி செய்தால் , மனம் லேசாகி விடும் – அழுத்தம் குறைந்து விடும் இப்படி செய்தவர் விஞ்ஞானி Albert Einstein – அதனால் அவர் ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட முடிந்ததாம்   வெங்கடேஷ்

திருவடிப் பெருமை

திருவடிப் பெருமை 1 நம்மில் சிலர் உணவு உண்ணும் முன் அதை கண்களுக்கு காட்டிவிட்டு உண்பர் – ஏன்?? அதை கண்களில் இருக்கும் திருவடிக்கு காட்டிவிட்டு , அவர்கள் உண்கின்றார்கள் அப்போது சாதம் – பிரசாதம் ஆகிவிடுகின்றது 2 நாம் அனைவரும் ஒருவர் காலை மிதித்துவிட்டால் , அவர் காலை தொட்டு வணங்குகிறோம் – நம் கண்களில் ஒற்றிக் கொள்கின்றோம் – ஏன் ?? உயிர்களில் எல்லாம் இறைவன் இருப்பதால் , அதனால் மற்றவர் கால் என்பது…

ஆணவ மல நிவர்த்தி எப்படி சாத்தியம் ??

ஆணவ மல நிவர்த்தி எப்படி சாத்தியம் ?? உயிர்கள் மூன்று மலங்களால் பிணிக்கப்பட்டுள்ளன – மாயா – கர்மம் – ஆணவம் இதில் ஆணவம் என்பது ஆதி மலம் – நாம் சிற்றம்பல வெளியில் உற்பத்தி செய்யப்பட்ட போதே , அந்த மலத்துடனே செய்யப்பட்டோம் என்பது உண்மை பிறகு , 2 மலங்கள் சேர்ந்து மூன்றாயின ஆணவ மல நிவர்த்திக்கு – முதலில் விந்து பரவிந்துவாக மாற வேண்டும் – சாதனா தந்திரங்களால் இதனை முடிக்க வேண்டும்…

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 11

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 11 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – திருவையாறு அகத்தில் 5 இந்திரியங்கள் ஒன்று சேர்ந்தால் நாதம் உண்டு பண்ணும் அந்த நாதத்தில் மனம் லயிக்க வேண்டும் – லயித்தால் மனம் ஒடுங்கி விடும் – மனம் ஒடுக்க பல வழிகளில் இதுவும் ஒன்று மனம் அடக்க முடியாது – அறிந்தால் அடங்கிவிடும் என்பதெல்லாம் இல்லை நாதத்தால் மனம் அடங்கி ஒடுங்கி விடும் – நாதத்துக்கு அவ்வளவு சக்தி…

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம்

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் மயிர்க்கால் எல்லாம் மாயும் வாயுவை அரன் தன்நாடியில் எற்று கருத்து : நாம் உள்ளிழுக்கும் மூச்சு மேலேறி , பின் கீழ் இறங்கி நுரையீரலுக்கு வந்து விடுகின்றது – அது உடல் முழுதும் தச வாயுக்களாக இயங்குகின்றது – அந்த வாயுவை சாதனா தந்திரம் மூலம் சுழிமுனை நாடிக்கு மேல் இழுக்குமாறு கூறுகின்றாள் பாட்டி அரன் நாடி = சுழிமுனை நாடி இது தான் உண்மையான பயிற்சி ஆகும் வெங்கடேஷ்

அவ்வைக் குறள் – சன்மார்க்க விளக்கம் – எப்போது தியான சமாதிகள் செய்யலாம் ??

அவ்வைக் குறள் – சன்மார்க்க விளக்கம்  – எப்போது தியான சமாதிகள் செய்யலாம் ?? தயாவினில் வாயு வலத்தினில் இயங்கும் போது தியான சமாதிகள் செய் கருத்து : நம் மூச்சு வலது நாசியினில் இயங்கும் போது தியான சமாதிகள் செய்ய வேண்டும் என்று அவ்வைப் பாட்டி அறிவுரை கூறுகிறாள் வெங்கடேஷ்