குருவை எதிர்த்து பேசிய ஒரே சீடன் – யார் ??
எல்லா சீடர்களும் தங்கள் குருவை தெய்வத்தின் அம்சமாக பார்ப்பார்கள் – அதனால் எதிர்த்துப் பேச மாட்டார்கள்
ஆனால் உலகில் ஒரே சீடன் தன் குருவை எதிர்த்து குரல் எழுப்பினார் என்றால் வியப்பாக இருக்கின்றதல்லவா ??
யார் அவர் ??
வள்ளல் பெருமான் தான் அவர்
அவர் குரு திருஞான சம்பந்தர்
இதைப் படித்தவுடன் சன்மார்க்கத்தவர் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள் – அதெப்படி ஒரு சமயத்தைச் சார்ந்தவர் அவர் குருவாக முடியும் – அவர் குரு அ பெ ஜோதி தான் என்று கூறுவர்
அவர்கள் கூற்றில் உண்மையில்லை
அவர்கள் எனது வலைத் தளத்தில் நான் எழுதிய திருஞான சம்பந்தர் – 1 , 2 , 3 பாகங்கள் படித்தால் அவருக்கும் வள்ளல் பெருமானுக்கும் இருந்து வந்த தொடர்பு என்னவென்று தெரிய வரும்
சம்பந்தர் பெருமான் மதுரையில் தங்கியிருந்த போது சமணர்கள் அவர் வீட்டுக்கு தீ வைத்து விட, அந்தத் தீயை மன்னருக்கு திருப்பி அனுப்பி விட்டார் – பின்னர் மன்னருக்கு திருநீற்றுப் பதிகம் பாடி அவர் வெப்பு நோயைக் குணப்படுத்தினார்
சமணர்களுடன் நடந்த அனல் வாதம் – புனல் வாதத்தில் சம்பந்தர் பெருமான் வென்றார் – அதனால் தோற்றவர்களை கழுவில் ஏற்றிக் கொன்றார்
இதனை மையப்படுத்தி வள்ளல் பெருமான் சம்பந்தர் பெருமானிடம் எதிர்வாதம் செய்தாராம் – எப்படி சமணர்களை இப்படி கொல்லலாம் – அதுவும் மிகக் கொடூரமாக கழுவில் ஏற்றிக் கொல்லலாம் என்று கேள்வி கேட்டாராம்
அவர் என்ன பதில் சொன்னாரோ தெரியாது – அது திருவடிகளாகிய சம்பந்தர் பெருமானுக்குத் தான்
வெளிச்சம்
வள்ளல் பெருமான் ” தனி ஒருவன் ( ர்) ”
வெங்கடேஷ்