சாதகனின் கடமையும் தருமமும் – பாகம் 3
ஒவ்வொரு சாதகனின் கடமையும் தருமமும், முன்னோர்கள் – ஞானியர் – சித்தர் பெருமக்கள் நடந்து சென்ற பாதையில் தன் சாதனமும் இருக்குமாறு பார்த்துக்கொள்வது தானே தவிர , அவன் தனக்கென ஒரு புதிய பாதை அமைத்துக் கொள்வதல்ல
ஏனெனில் நம் முன்னோர்கள் – வேத ரிஷிகள்- ஞானியர் – சித்தர் பெருமக்கள் ” எல்லாம் ” கூறிச் சென்றுவிட்டார்கள் – நாம் புதிதாய் கண்டுபிடிப்பதுக்கு ஏதுமில்லை – அப்படி கண்டுபிடித்தேன் என்று ஒருவன் கூறினால் அது அண்டப்புளுகு ஆகாசப்புளுகு ஆகும்
இலட்சக்கணக்கான நம் முன்னோர்கள் – ஞானியர் – சித்தர் பெருமக்கள் ஞானத்தை – ஆன்மா மற்றும் சிவத்தை அடைவதுக்கான வழிமுறைகள் கூறி , நடந்து சென்றும் காண்பித்துள்ளனர் – அது ஒரே வழிப்பாதை ஆகும் – ஆதலால் நாமும் அந்த வழியிலேயே போனால் நாமும் அவர்கள் அடைந்த முடிவினை அடைவோம்
நம் முன்னோர்கள் – ஞானியர் – சித்தர் பெருமக்கள் ஏற்கனவே பழம் தின்று கொட்டை போட்டவர்கள் – நாம் புதிதாய் ஒரு இசம் ( புத்திசம் – buddhism ) அல்லது இயம் ( வேதாத்திரியம் ) போன்று கண்டுபிடிக்கத் தேவையில்லை
அப்படி கண்டுபிடித்தால் , நம் முன்னோர்கள் – ஞானியர் – சித்தர் பெருமக்கள் கூறியதை வேறு வார்த்தைகளில் அந்த இடங்கள் – அனுபவங்கள் கூற வேண்டியிருக்கும்
நீருக்கு பதில் water என்று கூற வேண்டியிருக்கும் – ரெண்டும் என்னமோ ஒன்று தான் – அது தேவையில்லாத ஒன்று
சுழிமுனைக்கு பதில் வேறு பெயர் சொல்ல வேண்டியிருக்கும் – அவ்வளவு தான் – இதில் என்ன பெருமை இருக்கின்றது ??
புதிதாய் ஒன்றும் செய்துவிட முடியாது
நாம் எல்லோரும் 0 -9 வைத்துத் தான் கதை பண்ண முடியும் – அதை நம் முன்னோர்கள் செய்து முடித்து விட்டார்கள் – எனவே நாம் புதிதாய் செய்ய ஏதுமில்லை – இல்லை. நான் 10 என்று கதை சொன்னால் அது 1 – 0 என்பதின் கூட்டாகும் – இது வீண் வேலை
யார் தனக்கு பெயர் கிடைக்க வேண்டும் – தனக்கு பின்னால் தன் பெயர் நிலைக்க வேண்டும் என்று நினைக்கின்றார்களோ அவர்கள் தான் தனக்கு ஒரு தனியான மார்க்கம் – பாதை அமைத்துக் கொள்கின்றார்கள் என்பது உண்மை
வெங்கடேஷ்