கும்பமேளா – 12 வருடத்துக்கு ஒரு முறை – ஏன் ??
இந்த நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது – இது 12 வருடத்துக்கு ஒரு முறை காசி – பத்ரிநாத் – நாசிக் போன்ற நகரங்களில் கொண்டாடப்படுகின்றது
ஏன் 12 வருட இடைவெளி ??
ஏனெனில் ஒரு சாதகனுக்கு தன் சாதனை மூலம் ” பிரணவ கும்பம் ” அமைத்து ஆன்ம அனுபவம் கிடைக்க குறைந்த பட்சம் 12 ஆண்டுகள் தேவைப்படும்
இதை உணர்த்தத் தான் 12 ஆண்டுகள்
மேலும் இந்த உண்மையை பறை சாற்ற மேலும் சில இயற்கையின் வெளிப்பாடு
12 ஆண்டு முறை பூக்கும் குறிஞ்சி மலர்
குறிஞ்சி மலர் = ஆன்மா
மணிமேகலை இதிகாசத்தில் 12 ஆண்டு ஒரு முறை கனி கொடுக்கும் ஒரு அதிசய அற்புத மரம் –
அக்கனி சாப்பிட்டால் பசி போய்விடும் – 12 ஆண்டுக்கு பசி எடுக்காது
கனி = ஆன்ம அனுபவம் – இந்த அனுபவம் வந்துவிட்டால் பசி இருக்காது – எடுக்காது
” ஈறாறாண்டில் ஒரு கனி தருவது
அக்கனி உண்டோர் மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர் ”
சீத்தலை சாத்தனார்
விந்துவிடா வாழ்வாம் பிரமச்சரிய தவ சாதன வாழ்வு ( திருமணமாகா வாழ்வு அல்ல ) – 12 ஆண்டுகள்
ஒரு சாதகன் குறைந்த பட்சம் 12 ஆண்டுகள் தீவிரமாக பயிற்சி செய்தால் , அவன் ஒரு நிலைக்கு வரலாம் – அனுபவத்துக்கு வரலாம் – பிரணவம் அமைக்க குறைந்தது 12 ஆண்டுகள் ஆகும்
நாம் தினம் செய்வது போல் 1/2 மணி – 1 மணி நேரம் அல்ல – தீவிர பயிற்சி குறிப்பிடப்படுவது
இதை உணர்த்தத் தான் இந்த 12 வருட கணக்கு
வெங்கடேஷ்