ஞானியின் சாதனை – Performance card / Achievement card of a saint

ஞானியின் சாதனை

Performance card / Achievement card of a saint

உதாரணம் – ஹூண்டாய் கார் கம்பெனி

ஒரு நாளுக்கு 1000 கார் உற்பத்தி செய்ய வேண்டும் என்பது இலக்கு எனில்

அந்த  GM  நான் 900  உற்பத்தி செய்து இருக்கிறேன்

100 நம்பரில்

20 – பெயிண்டிங்கில் இருக்கின்றது

30 – இன்ஸ்பெக்ஷனில்

50 – அசெம்பிளியில்

எல்லாம் கூட்டினால் 1000 அகிவிடும் என்று ஒரு நாள் – 2 நாள் கூறலாம்

தொடர்ந்து சாக்கு போக்கு கூறி வந்தால் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்

இது நிதர்சனமான உண்மை

அது போல் ஞானியின் சாதனை என்னவெனில்

ஐம்புலன்கள் வென்று மரணத்தை வென்றிருக்க வேண்டும் – அது தான் வேறு எதுவும் இல்லவே இல்லை

அது முடியாமல் நான் வானத்தை  பூமிக்கு கொண்டு வந்திருக்கின்றேன் – அது /இது செய்திருக்கின்றேன் என்றால்  இயற்கை ஒப்புக்கொள்வதில்லை – தான் வைக்கும் மரணத் தேர்வு ஒன்று தான் – அதில் தேர்வாக ஆகவில்லை எனில் – அந்த வித்தையை கற்றுக்கொள்ள மறுபடி பிறப்பு என்னும் சுழலில் தள்ளிவிடும்

சித்தர்கள் – மரணம் வெல்லும் விண்ணப்பங்கள்

1 பத்திரகிரியார்

உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளும் முன்னே

அப்பிட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம் ??

உப்பிட்ட பாண்டம் = உடல்

அப்பிட்ட வேணியன் = சிவம்

பட்டினத்தார்

2 கான்சாயும் வெள்ளி மலைக்கரசே  – உன் கழல் நம்பினேன்

ஊன் சாயும் ஜென்மம் ஒழிப்பாய்

ஊன் சாயும் = உடல் கீழ் மண்ணில் சாயும் நிலை – மரணம்

ஆக மரணம் வெல்வது தான் ஒரு ஞானியின் உச்ச பட்ச சாதனையாகும் – தவமாகும்

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s