வாழ்க்கை நிதர்சன உண்மை – பாகம் 11
கவிஞர்கள் தம் கவித்திறம்
ஒரு சினிமாப் பாடல்
பிறப்பைத் தேர்ந்தெடுக்கும் இறப்பைத் தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை
இடத்தைத் தேர்ந்தெடுக்கும் நிறத்தைத் தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை
( பிறக்கும் இடம் – நம் தோலின் நிறம் )
கம்பங்கழி தின்னவனும் மண்ணுக்குள்ளே
தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
இந்த வாழ்க்கை வாழத் தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம்
கொண்டு செல்ல ( இது மட்டும் தப்பு – நாம் வினைகள் கொண்டு வந்தோம் – எடுத்துச் செல்கின்றோம் )
கவிஞர்கள் பாதி ஞானிகள் தான் – அவர்களுக்கும் எது சரி எது தப்பு என்று தெரியும்
எல்லாம் உண்மையை பறை சாற்றும் சத்தியமான வரிகள்
இவைகள் நம் ஜீவனின் உரிமை இல்லா நிலையை உணர்த்துகின்றன – எல்லாம் அவன் கையில் – நாம் எதுவும் முடிவு செய்வதில்லை – செய்ய முடியாது
பின் ஏன் எல்லாம் என் கையில் என்ற இறுமாப்பு ?? நரம்பு முறுக்கிக்கொண்டு நம் உடல் நலம் தான் கெட்டுப்போகும்
நம் இதயத்துடிப்பை மாற்றி அமைக்க முடியுமா ?? நம் இரத்த அழுத்தம் சரி செய்ய முடியுமா?? நம் உடல் நம் கட்டுப்பாட்டில் இல்லை – பின் எப்படி உலகம் – அதன் நிகழ்வுகள் நம் கட்டுப்பாட்டில் ??
நம் நிலை அறிந்து நாம் அடங்கி இருத்தல் நலம் – நமக்கும் உலகத்துக்கும்
வெங்கடேஷ்