இப்போதைய சூழலில் எந்த யோகம் பயிலலாம் ??
இப்போது நிறைய யோக வழிகள் உள
ஸ்ரீ வித்தை / விபாசனா
குண்டலினி யோகம்
வாசி யோகம்
ஈஷா யோகம்
Dynamic meditation
Transcendental meditation
இதில் எது ஆன்மாவுக்கு அருகில் உள்ளது எனில் அது வாசி யோகம் தான் ஏனெனில் வாசி இல்லாமல் ஆன்ம அனுபவம் கிடைக்காது என்பது உண்மை
என்னிடம் சன்மார்க்கத்தவர் நிறைய பேர் திருவடி தீக்ஷை கொடுங்கள் என்ற கேட்ட போது , பதிலுக்கு நான் , நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டதுக்கு , கேரளா வடகரை சென்று வாசி யோகம் கற்று வந்து , பயின்று வருவதாகத் தெரிவித்தனர்
அவர்கள் கூறும் குற்றச் சாட்டு , சன்மார்க்க சங்கங்கள் ஒன்றும் சொல்லிக்கொடுப்பதில்லை – வெறும் அன்னதானம் செய்தால் மட்டும் போதுமா ?? ஏதாவது பயிற்சி செய்தால் தான் அடைய முடியும் என்ற தெளிவில் இருக்கின்றார்கள்
ஆக சன்மார்க்க சங்கங்கள் கூடாரம் காலியாகி வருகின்றது – வடகரை பக்கம் காற்று வீசுகிறது – சன்மார்க்க சங்கங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
வெங்கடேஷ்