சாதகனின் இலக்கணம் – பாகம் 2

சாதகனின் இலக்கணம் – பாகம் 2 ஞான சம்பந்தன் தேவாரம் இடரினும் தளரினும் எனது உறுநோய் தொடரினும் உனது கழல் தொழுது எழுவேன் ஈவது எமக்கொன்று இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே கருத்து : எவ்வளவு துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் , நோய்கள் வந்தாலும் நான் உனது இணையடியை – திருவடியை தொழுது வணங்குவேன் நாம் இதுக்கு நேரெதிர் – கஷ்டங்கள் வந்தால் அவனை நினைத்து திட்டுவதும் ,நல்லது நடந்தால் மகிழ்ச்சியில் அவனை மறந்துவிடுதல்…

திருமந்திரம்

திருமந்திரம் எண்ணாயிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண்ணாரமுதினை கண்டார் இல்லை கருத்து : ஆயிரக் கணக்கான ஆண்டுகள் யோகத்தில் இருப்பவர்களுக்கும் இறைவனை தங்கள் ” கண்களால் காணமுடியவில்லை ” – அப்படியெனில் என்ன செய்ய வேண்டுமெனில் நம் சாதனத்தில் திருவடிகள் பற்றி தவம் செய்தால் , இறை தரிசனம் கிட்டும் வள்ளல் பெருமான் : எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தாளை ஏத்து என்று கூறிச் சென்றுள்ளார் திருவடிகளால் ஆகாத காரியம் இல்லை வெங்கடேஷ்

திருமந்திரம் – திருவடிப் பெருமை

திருமந்திரம் – திருவடிப் பெருமை மந்திரமாவதும் மாமருந்தாவதும் தந்திரமாவதும் தானங்களாவதும் சுந்தரமாவதும் தூய்நெறியாவதும் எந்தைபிரான் தன்னிணை அடிதானே கருத்து : திருவடி = மந்திரம் – பெரிய மருந்து – தந்திரம் – தானங்கள் – அழகியமானது – நன்னெறியும் ஆகும் ஆமாம் இந்த திருவடி என்றால் என்ன ?? திருவடி என்றால் நமக்கு இருக்கும் கால்கள் போல் என்று எண்ணக் கூடாது – இறைவன் ஜோதி வடிவினன் – அது போல் அவன் திருவடியும் ஜோதி…

தாயுமானவர் – பராபரக் கண்ணி

தாயுமானவர் – பராபரக் கண்ணி சினமிறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே திரண்ட கருத்து : சினம் இறக்கக் கற்றுவிடலாம் – சித்தி கூட பெற்றுவிடலாம் ஆனால் மனம் இறக்கும் வித்தை சித்தியாவது அவ்வளவு சுலபம் அல்ல என்கிறார் தாயுமானவர் மனம் திருவடிகள் முன் அடங்கிவிடும் – ஆன்மா முன் திருவடிகள் அடங்கிவிடும் – இது உண்மை வெங்கடேஷ்

வர்ணாசிரமத்தைச் சாடும் சித்தர் பெருமக்கள்

வர்ணாசிரமத்தைச் சாடும் சித்தர் பெருமக்கள் குதம்பைச் சித்தர் ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய் வீண்சாதி மற்றவெல்லாம் இதுக்கு விளக்கம் தேவையில்லை     வெங்கடேஷ்

“மூலத்தில் இருந்து எடுத்து குளத்தில் போடு – விளக்கம்”

“மூலத்தில் இருந்து எடுத்து குளத்தில் போடு – விளக்கம்” “மூலத்தில் இருந்து எடுத்து குளத்தில் போடு” இது அக சாதனத்தை விளக்க வந்த ஒரு மொழி மூலத்தில் என்ன இருக்கிறது ?? விந்து செல்வம் – விந்து கலை மூலம் = இரு புருவ மத்தி – மூலாதாரம் அல்ல இதை சாதனம் மூலம் மேலேற்றி குளமாகிய சுழிமுனை உச்சிக்கு எடுத்துக் கொண்டுப் போய்ச் சேர்த்துவிடு என்பது இதன் பொருள் ஆகும் குளம் = சுழிமுனை உச்சி…

நான் தியானம் செய்யும் போது காட்சி கொடுத்த மகான்கள் – சித்தர்கள் – ஞானிகள் – பாகம் 2

நான் தியானம் செய்யும் போது காட்சி கொடுத்த மகான்கள் – சித்தர்கள் – ஞானிகள் – பாகம் 2 தியானம் செய்யும் போது – விஷனில் வரும் காட்சிகள் இவைகள் 1 ஸ்ரீ ராமன் – பல முறை – ஒரு முறை என்னைத் தழுவி முதுகில் தட்டிக் கொடுத்துள்ளார் 2 ஸ்ரீ கிருஷ்ணர் – பல முறை – அடிக்கடி தரிசனம் கிடைக்கும் 3 ஆதி சங்கரர் 4 லட்சுமி தேவி – கொள்ளை அழகு…

ஆங்கில மொழியின் அலங்கோலம்

ஆங்கில மொழியின் அலங்கோலம் ஒரு உதாரணம் Lt Governor – லெஃப்டினெண்ட் கவர்னர் Lt General – லெஃப்டினெண்ட் ஜெனெரல் இது ஒரு quiz வினாடி – வினாவில் கேட்கப்பட்ட கேள்வி இந்த வார்த்தை லெஃப்டினெண்ட் ஐ ஆங்கிலத்தில் பிழை இல்லாமல் யாருக்காவது எழுதத் தெரியுமா ??? ஆங்கிலத்தில் உச்சரிப்பது ஒன்று எழுதுவது வெங்கடேஷ்