திருமந்திரம் – அவஸ்தை பேதம்
துரியம் இருப்பதுவும் சாக்கிரத்துளே
நரிகள் பதினாங்கும் நஞ்சுண்டு செத்தன
கருத்து : துரியம் என்று சொல்லப்படுகின்றன உயர் அவத்தை நிலை சாக்கிரத்துள் ( நனவு ) இருக்கின்றது – அன்னிலையில் நரிகள் 14 தத்தம் வேலை செய்யாமல் மடிந்து போயின என்கிறார் திருமூலர்
14 நரிகள்
ஞானேந்திரியங்கள் – 5
அதன் கன்மம் – 5
அந்தக்கரணங்கள் – 4
மொத்தம் – 14
உண்மையில் சாதனத்தில் அனுபவத்தில் நனவு நிலையில் ஞானேந்திரியங்கள்/ மனமும் ஓரிடத்தில் கட்டப்பட்டு செயல் இழக்கும்
அனுபவத்தில் இருப்போர்க்கு இது புரியும்
வெங்கடேஷ்