எழுதா மறை
இது வள்ளல் பெருமான் எழுதிய நூல் அன்று – இது அவர் ஞான சபையில் வைத்த நீல நிற – ஒன்றும் எழுதா நூல் – வெற்று நூல் – புத்தகம் ஆகும்
ஆமாம் – ஏன் இதனை வைத்தார் ??
இது தெரியாமல் தான் சபைக்கு திருப்பணி செய்தவர்கள் இதனை எடுத்து வெளியே வீசி விட்டார்கள் – யார் என உறுதியாகத் தெரியவில்லை – வாரியார் சுவாமியாரோ ?? சரியாகத் தெரியவில்லை
ஏன் இந்த வெற்று நூல் ??
அதாவது நாம் நிறைய கற்றுத் தேர்ந்து , அவ்வைஷயங்கள் யாவும் மனதில் – மூளையில் குப்பைகளாக தேங்கியுள்ளன –
அவைகள் எல்லாம் சுத்தமானால் தான் அருள் – இறை நம்முள் குடியேறும் – குடியேறுவதுக்கு இடம் வேணுமல்லவா ?? அதான் சுத்தம் செய்து வையுங்கள் என்று எழுதா மறை நூல் மூலம் மறைமுகமாக நமக்கு சுட்டிக்காட்டுகின்றார் பெருமான்
இது ஏனெனில் நம் மனம் – குண்டு கல்யாணம் மாதிரி இருக்கிறது – அவ்வளவும் குப்பைகள் – இதனை ஊசி போல் மெலியச் செய்தும் பின் காலியாக்கிவிட வேணும் -அதுக்குத் தான் இந்த நூல்
its easy for a camel to enter into the eye of needle than for a rich to enter into the kingdom of god
rich = குப்பைகள் உள்ள மனம்
வெங்கடேஷ்