ஜீவ உருக்கமும் ஆன்ம உருக்கமும்

ஜீவ உருக்கமும் ஆன்ம உருக்கமும்

1 ஜீவ உருக்கம்

உண்மைச் சம்பவம் – கோவை விமான நிலையம்

எங்கள் குடும்பத்துக்குத் தெரிந்த பெண் – அவள் கணவனுக்கு துபாயில் வேலை – ரெண்டு வருடம் கழித்து வருகிறார்- அவள்/ நாம் அவரை வரவேற்க சென்றிருக்கின்றோம்

அவள் அவரைப் பார்த்தவுடன் அழுதுவிட்டாள் – தன்னிலை மறந்து ஓடிச்சென்று கட்டி அணைக்க முற்பட்டாள் – பின் சுதாரித்துக்கொண்டாள்
இது ஜீவ உருக்கம்
அதாவது தன் கணவனை நினைந்து நினைந்து அவள் ஜீவன் நெகிழ்ந்து இருக்கின்றது
அதான் புருஷனைப் பார்த்தவுடன் கண்ணீர்

அந்த ஒரே சதா நினைவு உடலில் ஒரு வித உஷ்ணத்தை உண்டு பண்ணுகிறது – அது ஜீவனை உருக்குகிறது

இப்படித்தான் உருக வேணுமே அல்லாது – சோறு போட்டு அல்ல –
உண்மையான ஜீவகாருண்ணியம் = ஜீவ உருக்கம்
இது இல்லாமல் எவ்வளவு தான் சோறு போட்டாலும் அது வீண் – சன்மார்க்கத்தவர்கள் கவனிக்க

அந்த உஷ்ணம் தான் ஜீவனை ஆன்மாவுடன் கலக்க வைக்கும் – இந்த உஷ்ணத்தை சாதகர்கள் சாதனையால் உண்டு பண்ணுகிறார்கள்

 

2 ஆன்ம உருக்கம்

உண்மைச் சம்பவம் இல்லை – எனது சம்பவம் தான் நடக்க வேண்டும் – என் ஆன்மா தான் உருக வேண்டும்

திருமந்திரம்

“புளிக் கண்டவர்க்கு புனல் ஊறுமாப்போல்
களிக்கும் திருக்கூத்து கண்டவர்க்கு எல்லாம்
துளிக்கும அருட்கண்ணீர்சோர் நெஞ்சு உருக்கும்
ஔிக்குள் ஆனந்தத்து அமுதுறும் உள்ளத்தே.

எப்படி ஆன்மா கண்டவுடன் ஜீவன் உருகுகின்றதோ , அது போல் ஆன்மாவும் அ பெ ஜொதியை /சிவத்தை சிற்றம்பலத்தில் கண்டவுடன் உருகிவிடும் – அருட் கண்ணீர் ( சாதா கண்ணீர் அல்ல ) பெருக்கும் – அமுதம் ஊறும்

எல்லா அனுபவமும் உருகுதலில் இருக்கின்றது – அந்த உருக்கத்துக்கு உஷ்ணம் வேண்டும்

வெல்டிங்கில் இரு பொருள்களும் இணைய வேண்டுமெனில் , weldg rod கொண்டு சூடாக்கி பின் இணைத்துவிடுகின்றார்கள்

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s