திருமந்திரம் – ஐம்புலன் அடக்கம்

 

திருமந்திரம் – ஐம்புலன் அடக்கம்

அஞ்சும் அடக்கு அடக்கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே

கருத்து :
ஐம்புலங்களை அடக்க வேண்டும் என்று அறிவிலாதவர் கூறுவர் – அப்படி அடக்கும் தேவர்களும் இல்லை
ஐம்புலங்களை அடக்காமல் அடக்கும் அறிவு அறிந்து கொண்டேன்

நடைமுறைப்படுத்தும் விதம்:

ஐம்புலங்களை அடக்காமல் அடக்குதல் எப்படி எனில் – அதனை திடீரென்று இதை விடு / அதை விடு என்றால் வேலைக்காகாது

திடீரென்று புலால் உண்பதை விடு – பெண் போகம் விட்டுவிடு என்றால் நடைமுறைக்கு வராது – எப்படி அரசு ஊழியர்கள் தங்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் சலுகைகள் திடீரென்று நிறுத்தினால்
போராட்டம் செய்கின்றார்களோ அப்படி புலங்களும் செய்ய ஆரம்பித்துவிடும்

அதனால் புலங்களை மடை மாற்றி , பிரணவத்துக்கு திருப்பினால் , அது கொஞ்சம் ஜொஞ்சமாக நம் வஸப்பட்டு நிற்கும் – நம் கட்டளைக்கு அடிபணியும்
புலங்களுக்கு இதை விட வேறு பெரிய இன்பம் காட்டுகிறேன் என்று கூறி , மடை மாற்ற வேணும்

அப்போது அது அடங்காமல் அடங்கி விடும் – இதை தான் திருமூலர் கூறுகின்றார்

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s