திருமந்திரம் – தச நாத விளக்கம்

திருமந்திரம் – தச நாத விளக்கம்

மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.

கருத்து :
நம் சாதனையில் சுழிமுனை நாடியின் அடி வாசலை திறந்து மேல் செல்லும் போது , அதாவது வாசி மேலேறும் போது , பத்து வித நாதங்கள் சாதகனுக்கு கேட்கும்
அதனால் இந்த நாடிக்கு ” நாத நாடி ” என்று பெயர்
இதில் மனதை லயம் செய்து , அதை வெளியே செல்லாமல் வைத்து கட்ட வேணும்

அப்படி செய்தால் சாதகன் சுழிமுனை உச்சி வாசலுக்கு சென்றுவிடுவான்

தச நாத விபரம்

1. மணியோசை
2. கடல் அலையோசை
3. யானை பிளிறும் ஓசை
4. புல்லாங்குழலோசை
5. இடியோசை
6. வண்டின் ரீங்கார ஓசை
7. தும்பியின் முரலோசை
8. சங்கொலி
9. பேரிகை ஓசை
10. யாழிசை
இந்த தச நாதங்கள் யாவும் சாதகன் , சாதனத்தில் அடங்கி இருந்தால் சுழிமுனை நாடியில் மேலேற மேலேற கேட்பான் – அதுவும் உண்டாகும்

இது மூலரின் அனுபவம் ஆகும்

 

வெங்கடேஷ்

13 thoughts on “திருமந்திரம் – தச நாத விளக்கம்

      • திருவாசகம்-திருப்படையாட்சியில் சில வரிகள்- கண்களிரண்டும் அவன் கழல் கண்டு கழிப்பன ஆகாதே -நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவதாகாதே -வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே -சொல்லியலாதெழு தூமணிஓசை சுவைதருமாகாதே- என்னை முன் ஆளுடை ஈசன் என்அத்தன் எளுந்தருளப்பெறிலே- அது பெரிய கதை. இவளின் சுயசரிதை சொல்லவேணும். சுழுமுனை தசநாதங்கள் ஏதும் அறியேன். திருவருளின் நாதவெளிப்பாட்டின் பின்பு நூல் ஆராய்ச்சியில் அறிந்து கொண்டேன் .சந்தர்ப்பத்தின் போது பகிர்வேன்.

        Like

      • thanks கண்களிரண்டும் அவன் கழல் கண்டு கழிப்பன ஆகாதே -நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவதாகாதே -வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே -சொல்லியலாதெழு தூமணிஓசை சுவைதருமாகாதே- என்னை முன் ஆளுடை ஈசன் என்அத்தன் எளுந்தருளப்பெறிலே-

        these verses refer that once suzhimunai is opened , we need not conjunct eyes as we did in sathanas _ I am well aware of these verses

        Like

      • திருஅடிகள் கலக்கும் போது அது தச நாதம் உண்டாக்கும் – அது கண்மணியில் இருக்கும் ரகசியம் – அது தான் பயிற்சி ஆகும்

        Like

    • இந்த வரிகள் நாம் கண்களான திருவடிகளை சுழுமுனை திறந்தபின் சேர்க்க வேண்டிய பின் சேர்க்க வேண்டிய அவசியமைலை என சொல்கிறது

      Like

  1. தயவு கூர்ந்து சங்கு நாதம் எப்படி இருக்கும் என கூறவும். சங்கை வாயால் ஊதிய ஒளி கேட்குமா அல்லது காற்று சங்க்கை தாயுவிய ஒளி கேட்குமா.

    Like

    • if interested , send yr email id to venka_tesh90@yahoo.com

      An Announcement

      எனது வலைத்தளமான ” 1008petallotus.wordpress.com ல் பதிவுகள் 6800 தொட்டுவிட்டது – பெரும்பாலும் தமிழில் தான் உள்ளன – விருப்பமுடையவர்கள் படிக்கலாம்
      பார்வைகள் – 2,39 ,000 +
      பார்வையாளர்கள் – இந்தியா , அமெரிக்கா , ஃப்ரான்ஸ் அதிகம்
      இதில் சன்மார்க்க கட்டுரைகள் , மரணமிலாப் பெருவாழ்வு, சாகாக்கலை, நெற்றிக்கண் திறப்புக்கான வழிகள் , சித்தர்கள் பாடல்கள் பொருள், அவ்வைக்குறள் விளக்கம், திருமந்திரம் , திருவாசகம் பாடல்கள் விளக்கம் இடம் பெற்றுள்ளன
      திருவருட்பா
      மெய்யருள் வியப்பு
      அகவல்
      சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல்
      முத்தேகச் சித்தி
      உயிர் – அருள் – சுத்த சிவ அனுபவம்
      ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சிகள்
      மற்றும் தனி திருவருட்பா பாடல்களுக்கு – விளக்கம் உள்ளன
      English and other Languages proficiency development – GK – Personality development all enveloped in my blog

      ஆரோக்கிய குறிப்புப் பதிவுகளும் உள

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s