திருமந்திரம் – திருவடி ஞானப் பெருமை
திருவடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
கருத்து :
திருவடி ஞானம்
1 சிவமாக்குவிக்கும்
2 சிவம் இருக்கும் சிற்றம்பலம் சேர்க்கும்
3 மும்மலத்தில் இருந்து விடுதலை கொடுக்கும்
4 இந்த ஞானத்தினால் முத்தியும் சித்தியும் கிடைக்கும்
எத்தனை பேருக்கு திருவடி என்றால் என்ன ?? எங்கிருக்கின்றது என தெரியும் ?? சன்மார்க்கத்தவருக்கு கூட தெரியாது ??
எப்படி அதை உபயோகிப்பது ?? யார்க்கும் தெரியாது
இது இல்லாமல் உண்மை சாதனம் இல்லை என்பது உண்மை
வெங்கடேஷ்