சன்மார்க்கத்தவர் கற்பனையும் உண்மையும்

சன்மார்க்கத்தவர் கற்பனையும் உண்மையும்

1 எல்லா சன்மார்க்கத்தவரும் ஞான சபையில் காட்டப்படும் ஜோதி அ பெ ஜோதி என்று எண்ணியுள்ளனர் – அதை நம்பித்தான் அங்கு விஜயம் செய்து தரிசனம் செய்கின்றனர் என்பது உண்மை

ஆனால் அந்த ஜோதி – அ பெ ஜோதி அன்று , அது ஆன்ம ஜோதி தான் – ஏனெனில் 7 திரைகள் நீக்கினால் தெரிவது ஆன்மா தானே தவிர அ பெ ஜோதி அல்ல என்று அவர்கள் தெளிய வேண்டும்

2 அ பெ ஜோதி எங்கு இருக்கின்றது ??
அது ஆன்மாவுக்குள் இருக்கின்றது – எனவே நாம் APJ பார்க்க வேணுமென்றால் , நாம் முதலில் ஆன்மாவை பார்த்திருக்க வேண்டும் – பின் தான் அ பெ ஜோதி தரிசனம் கிட்டும் என்பது உண்மை

3 எல்லா சன்மார்க்கத்தவரும் வள்ளல் பெருமான் சித்தி வளாகத்தில் APJ ஆண்டவரிடம் ஒன்றாகக் கலந்து விட்டதாக எண்ணியுள்ளனர் – அது தவறு ஆகும்
ஆனால் அவர் தம் தேகம் அருள் ஒளியால் முழுதும் வேதிக்கப்பட்டு , அருள் அணுக்களாக மாற்றப்பட்டு , அண்ட சராசரம் முழுதும் பரவிவிட்டது என்பது உண்மை – அது தான் ஞான தேகம் ஆகும்

அதாவது அவர் ஞான வெளியாக மாறிவிட்டார் – வெளிக்கு என்றும் அழிவு கிடையாது

இதை தான் அவர் கூறினார்
” நான் இப்போது இந்த உடலில் இருக்கின்றேன் – பிறகு எல்லா உடம்பிலும் கலந்து விடுவேன் ”

இதன் அர்த்தம் – ” நான் வெளியாக மாறி எல்லா உடம்பிலும் கலந்து கொள்வேன் ” என்பதாகும்
நம் உடலிலும் வெளி இருக்கின்றது – ஒவ்வொரு செல்லுக்கு நடுவிலும் வெளி உள்ளது

4 நான் திருமந்திரப் பதிவுகள் போடுகின்றேன் – ஆனால் சன்மார்க்கத்தவர் அதை சீண்டிக்கூட பார்க்கமாட்டார் என நான் அறிவேன்
அவர்கள் வள்ளல் எழுதிய 5 திருமுறைகளை ஒதுக்கி வைத்துவிட்டனர் – எப்படி திருமந்திரம் படிப்பார்கள்
6ம் திருமுறையை மட்டும் தான் படிக்கின்றனர்

அவர்கள் திருமூலரை எல்லாம் கடந்து போய்விட்டனர் ?? சோறு போட்டே எல்லா நிலையையும் கடந்து விட்டனர்

வெங்கடேஷ்

 

 

வெங்கடேஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s