திருமந்திரம் – தலை அடி ( அடி முடி ) விளக்கம்
தலையடி யாவ தறியார் காயத்தில்
தலையடி உச்சியில் உள்ளது மூலம்
தலையடி யான அறிவை அறிந்தோர்
தலையடி யாகவே தானிருந் தாரே
கருத்து :
இந்த உடலில் தலை எது , அடி எது என்று மக்களுக்கு தெரியவில்லை
தலை = உச்சி – சிற்றம்பலம் ஆகும் – நெற்றி நடுவுக்கு மேல் – பெண்கள் உச்சி பொட்டு வைக்கும் இடம் ஆகும்
அடி = மூலம் ஆகும் – இது இரு புருவ மத்தி ஆகும்
இந்த அறிவை அறிந்தோர் அடி முடியாகவே மாறி விடுவர் எனில் அந்த அனுபவம் பெற்று அன்னிலையில் ( சுழிமுனை அனுபவம் ) விளங்குவர் எங்கின்றார் மூலர்
வெங்கடேஷ்