போலிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் – பாகம் 6

போலிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் – பாகம் 6 இனன்யா முனிவர் ஊரை ஏமாத்திக்கொண்டிருக்கின்றார் இவர் கடவுளின் 2000 வது அவதாரமாம் – இவர் யாகவாமுனிவரின் மகனாம் – நல்ல வேடிக்கை – நல்ல காமெடி இந்த யாகவாமுனிவரே பெரிய காமெடி நடிகருக்கு சமமாக வேடிக்கை காட்டுவார் இவரை விவேக் நல்ல கலாய்ச்சினார் – அவ்வளவு தமாசு நடிகர் இவரைப் பற்றி வலைகளில் எழுதி இனன்யாய நமோ : என்று ஜெபித்து வருகின்றார்கள் இவரை தொடர்பவர்கள் –…

வள்ளல் பெருமானின் இரு கண்கள்

வள்ளல் பெருமானின் இரு கண்கள் வள்ளல் பெருமானின் இரு கண்கள் – திருவாசகமும் திருமந்திரமும் உரை நடை 47 . திருமந்திரம் இந்த மார்க்க உண்மையை தெரிய வேண்டுமாகில் திருமந்திரத்தை கவனிக்கில் விளங்கும் 48. திருவாசகமும் திருமந்திரமும் சாத்திரங்களில் சிறந்தது திருமந்திரம் – இது மொத்தம் எண்ணாயிரம் ; தோத்திரங்களில் சிறந்தது திருவாசகம் – இவற்றை ஊன்றிப் பார்க்கவும் வள்ளலின் பேச்சை எத்தனை சன்மார்க்கத்தவர் பின்பற்றினர் ?? ஏன் இந்த 2 நூல்களை ஓதவில்லை ?? ஏன்…

திருமந்திரம் – ஆன்ம அனுபமும் சிவ அனுபவமும்

திருமந்திரம் – ஆன்ம அனுபமும் சிவ அனுபவமும் சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகிற் சமாதிகள் தானில்லை தான் அவனாகில் கருத்து : இறையுடன் நாம் கலந்து நின்றால் சமாதி தேவையில்லை – நாம் ஆன்மாவாகி விட்டாலும் சமாதி தேவையில்லை வெங்கடேஷ்  

திருமந்திரம் – காய கல்பம் – காய சித்தி

திருமந்திரம் – காய கல்பம் – காய சித்தி நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்டம் இல்லை மனைக்கும் அழிவில்லை கருத்து : யார் தன் கண்களை நடுமூக்கு எனப்படும் இரு புருவ மத்தியில் சேர வைத்து இருக்கின்றார்களோ , அவர்க்கு கவலையும் இல்லை , உடலுக்கு அழிவும் இல்லை   வெங்கடேஷ்

திருமந்திரம் – நடுவு நிலைமை

திருமந்திரம் – நடுவு நிலைமை நடுவு நின்றார் சிலர் ஞானிகளாவர் நடுவு நின்றார் சிலர் தேவருமாவர் கருத்து : யார் தன் சுவாசத்தை இடை – பிங்களை நாடிகளில் செலுத்தாமல் இடை நாடியாம் சுழிமுனை நாடியில் செலுத்துகின்றாரோ , அவர்களில் சிலர் ஞானிகளும் ஆவர், சிலர் தேவரும் ஆவர்   வெங்கடேஷ்

திருமந்திரம் – இறை நிலை

திருமந்திரம் – இறை நிலை மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும் உண்ணின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா அண்ணலும் இவ்வண்ணம் ஆகினின் றானே கருத்து : எப்படி மண் ஒன்றே பல மண்பாத்திரங்கள் ஆவது போல் , தெய்வம் ஒன்றே பல உயிர்களிலும் கலந்து இருக்கின்றான் ஒரு கண் பல காட்சிகள் கண்டு , தனை காணாது போல் இறைவனைக் காணாமல் உயிர்கள் புறத்தை நோக்கி , அகத்தில் அவனைக் காணாமல் இருக்கின்றார்கள்…

திருமந்திரம் – வாழ்க்கை நிலையாமை

திருமந்திரம் – வாழ்க்கை நிலையாமை ஊரெலாங்கூடி ஒலிக்க அழுதிட்டு பேரினை நீக்கி பிணமென்று பேரிட்டு சூரையன் காட்டிடை கொண்டுபோய்  சுட்டிட்டு நீரினால் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே கருத்து : ஒருவர் இறந்தவுடன் ஊர் கூடி, அழுதும் , ஓலமிட்டும் , அவர் பேர் நீக்கி , பிணமென்று கூறி, சுடுகாட்டில் எரித்து , பின் குளித்து அவர் நினைவை மறந்துவிடுவார்கள் உலகத்தவர் வெங்கடேஷ்

திருமந்திரம் – சமாதி

திருமந்திரம் – சமாதி தானவனாகும் சமாதி கைகூடினால் ஆன மலமறும் அப்பசுத் தன்மைபோம் ஈனமில் காயம் இருக்கும் இருனிலத்தே ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே கருத்து : தான் = ஜீவன் அவன் = ஆன்மா ஜீவன் ஆன்மாவுடன் சமாதி சமம் ஜீவன் ஆன்மாவுடன்  சமம்  ஆகும்   சமாதி  நிலை சித்தி ஆனால் , மலங்கள் நீங்கும் – ஜீவன் என்ற நிலை கழிந்து – ஆன்மா ஆக உருப்பெறும் உடல் நீடித்து இருக்கும் – எல்லா ஊனங்கள்…

On a lighter note – part 24

On a lighter note – part 24 உண்மைச் சம்பவம் – சென்னை L & T Training Hall ஒரு டிரெய்னிங் Training வகுப்பு – அந்த ஆசிரியர் எல்லோரிடமும் ´”common sense  – any  thought provoking and mind blowing statements ??” என்று கேட்டார் ஒருவன் மட்டும் எழுந்து ” ” common sense  is not common amongst all ” என்றான் வகுப்பு நடத்துபவர் ” giving…