இறையின் வியாபகம்

இறையின் வியாபகம் ஒன்று – சிவம் இரண்டு = சிவம் + சக்தி மூன்று = இடை – பிங்கலை – சுழிமுனை நாடிகள் நான்கு = வேதங்கள் ஐந்து = பஞ்ச பூதங்கள் – பஞ்சேந்திரியங்கள் ஆறு = அறுசுவை ஏழு = சப்தஸ்வரங்கள் எட்டு = எண்குணங்கள் ஒன்பது = நவரசங்கள் , நவதானியங்கள் பத்து = ” ய” காரமாகிய பத்தாம் வாசலில் ஆன்மாவாக   வெங்கடேஷ்  

சன்மார்க்கத்தவர்க்கு தகுதிகள் என்ன ??

சன்மார்க்கத்தவர்க்கு தகுதிகள் என்ன ?? எப்படி IITக்கு JEE நுழைவுத்தேர்வில் வெற்றி அவசியமோ , MBBS க்கு – NEET தேர்வில் வெற்றி தேவையோ , அப்படி சன்மார்க்கத்தில் இருப்பதுக்கும் , இருந்து சாதிப்பதுக்கும் சில தகுதிகள் தேவைப்படுகின்றன அவை திருக்குறள் திருமந்திரம் திருவாசகம் படித்து இருத்தல் மிக மிக அவசியம் படித்தால் மட்டும் போதாது – அதில் சொல்லப்பட்டிருக்கும் சூக்கும விஷயங்களை கண்டுபிடித்து , அதை சாதனத்தில் புகுத்தி வெற்றி காண வேணும் – 1…

திருமந்திரம் –  பராசக்தியின் உதவி – தயவு

திருமந்திரம் –  பராசக்தியின் உதவி – தயவு அவளை அறியா அமரரும் இல்லை அவளன்றி செய்யும் அருந்தவம் இல்லை அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை அவளன்றி யூர்புகு மாற்றி யேனே கருத்து : அவள் = பராசக்தி அவளை தெரியாத தேவர்கள் இல்லை அவளைக் கொண்டு தான் செய்யும் தவம் எல்லாம் 5 தொழில் செய் தலைவர்கள் தத்தம் தொழிலை இவள் தயவில்லாமல் செய்ய முடியாது பராசக்தியின் உதவி – தயவு இல்லாமல் நாம் நம் இருப்பிடம்…

திருமந்திரம் – சிவத்தின் அருள் பெற்றோர் தன்மை

திருமந்திரம் – சிவத்தின் அருள் பெற்றோர் தன்மை பிரானருள் உண்டெனில் உண்டுனற் செல்வம் பிரானருள் உண்டெனில் உண்டுனற் ஞானம் பிரானருளிற் பெருன் தன்மையும் உண்டு பிரான் அருளிற்பெருன் தெய்வமும் ஆமே கருத்து : யாருக்கு சிவத்துடைய அருள் இருக்கின்றதோ அவர்க்கு நல்ல செல்வம் உண்டு – நல்ல ஞானம் ( ஆன்ம அறிவு – ஆன்ம அனுபவம் ) உண்டு சிவம் அருள் செய்வதில் பெருந்தன்மை கொண்டு செய்யும் பெரும் தெய்வமும் ஆகும் வெங்கடேஷ்

திருமந்திரம் – கலைகளின் தோற்றம்

திருமந்திரம் – கலைகளின் தோற்றம் அங்கி மதிகூட ஆகும் கதிரொளி அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி அங்கி சசிகதிர் கூடவத் தாரகை தங்கி அதுவே சகலமும் ஆமே கருத்து : அக்கினியுடன் சந்திரன் கூடினால் = சூரியன் ஆகும் அக்கினியுடன் சூரியன் கூடினால் = சந்திரன் ஆகும் அக்கினி + சூரியன் + சந்திரன் = தாரகை – நட்சத்திரக்கலைகள் ஆகும் இது தான் சகலமும் எல்லாம் ஆகும்   வெங்கடேஷ்

திருமந்திரம் – சமாதி

திருமந்திரம் – சமாதி சமாதி யமாதியில் தான்செல்லக் கூடும் சமாதி யமாதியில் தானெட்டுச் சித்தி சமாதி யமாதியில் தங்கினோர்க்கு அன்றே சமாதி யமாதி தலைப்படும் தானே கருத்து : இயமம் ஆகிய முதல் படியைக் கொண்ட அஷ்டாங்க யோகம் செய்பவர்களுக்கு சமாதியாகிய இறுதி படி செல்லக் கூடும் சமாதியில் தான் அஷ்டமாசித்தி கைவல்லியம் – சித்தி ஆகும் இயமம் முதல் சமாதி வரை பழகினோர்க்கு – இந்த எட்டுப் படிகள் கொண்ட அஷ்டாங்க யோகம் வந்து எய்தும்…

On a lighter note – 25

On a lighter note -25 If ever you feel overloaded by life, wife or work …. Immediately go to the nearest “Biological Anxiety Relief” (BAR) center & place order for any 1 or more of the following Antidotes 1 Wife Irritation Neutralizing Extract (WINE) 2 Refreshing Unique Medicine (RUM) 3 Bothersome Employer Elimination Rebooter (BEER)…

நவராத்திரி விழா – சன்மார்க்க விளக்கம்

நவராத்திரி விழா – சன்மார்க்க விளக்கம் இந்த பண்டிகை இம்மாத இறுதியில் கொண்டாடப்படுகின்றது இதை எப்படி விளக்குகின்றனர் 3 நாட்கள் – லட்சுமிக்கும் 3 நாட்கள் – சரஸ்வதிக்கும் 3 நாட்கள் – துர்க்கைக்கும் என பகர்கின்றனர் நம் மக்கள் இதெல்லாம் கட்டுக்கதை – பொய் உண்மையில் நவராத்திரி விழா என்பது ஒன்பது ஒளிகள் – நவரத்தின ஒளிகளை சாதனாதந்திரத்தால் ஒன்று சேர்த்து , அதை ஆயுதமாகக் கொண்டு தீய குணங்கள் – மும்மலங்களை அழிப்பதாகும் –…