எழுத்துச் சித்தர் பாலகுமாரனுடன் எனது அனுபவங்கள்
உண்மைச் சம்பவம் – சென்னை – 1997
பால குமாரன் – சிறந்த எழுத்தாளர் – இதுக்கு முன்னால் டிராக்டர் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தார் – அதை உதறி விட்டு , முழு நேர எழுத்துக்கு வந்துவிட்டார்
இவர் குரு தி மலை விசிறி சாமியார்
ஆராய்ச்சிகள் செய்து கதைகள் எழுதுவார் – நன்றாக இருக்கும் – Stuffed person
நான் அப்போது எல் & டி யில் வேலை செய்து கொண்டிருந்தேன்
நிறைய பாலகுமாரன் சிறுகதைகள் படிப்பேன் – எல்லாம் செகண்ட்சில் – பிளாட்பார கடைகளில் 2- 3 ரூபாய்க்கு வாங்கி படிப்பேன்
சுமார் 75 சிறுகதைகள் படித்திருப்பேன்
அதில் ஒரு கதையில் ” வாலைக்குமரியின் வயது ஆறு என்று குறிப்பிட்டு இருந்தார் – நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு , இது எப்படி சரி என்று வினவினேன் – ஏன் அதில் என்ன தப்பு ??
என்றார்
நான் – அவள் வயது 10 பத்து ஆகும் – அது 8 + 2 கூட்டுத் தொகை ஆகும் என்றேன்
மேலும் வாலை = ஆன்மா – ஆன்ம அனுபவம் ஆகும் என்றேன்
உன் வயது என்ன ?? என்று கேட்டார் – 27 என்றேன்
உனக்கு வயசு பத்தாது என்றார்
நான் – ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் குடிக்கும் போது வயசு மூன்று – உங்களுக்கு 50 – நீங்கள் அதுக்கு இன்னம் தகுதி அடையவில்லை – ஆதலால் வயசு பற்றிப் பேச வேண்டாம் என்றேன்
கோபம் அதிகமாகி தொலைபேசி துண்டித்துவிட்டார்
பின் மற்றும் ஒரு முறை அவர் குரு யோகி ராம் சுரத்குமார் அவரை தொட்டு வாழ்த்தியதாகவும் அந்த அனுபவம் குறிப்பிட்டு இருந்தார்
அப்போது அவர்க்கு முதுகுத் தண்டின் அடியில் இருந்து ஏதோ மேல் கிளம்பியதாக உணர்ந்தாராம்
அது என்ன ?? என்று கேட்டேன்
அவர் குண்டலினி என்றார்
நான் முதுகுத் தண்டின் அடியில் என்ன இருக்கிறது – மலம் ஜலம் தவிர – அங்கு எப்படி குண்டலினி இருக்க முடியும் என்று கூறினேன்
உனக்குப் புரியவில்லை என்றார்
நான் – நீங்கள் திருவாசகம் நன்கு ஆராய்ச்சி செய்யவும் – உண்மை விளங்கும்
மாத நாவல் எழுதும் நோக்கில் ஆய்வு வேண்டாம் – உண்மையை அறியும் நோக்கில் ஆய்வு செய்யவும் என்று கூறினேன்
அப்போது குண்டலினி எங்கிருக்கின்றது என்று தெரிய வரும் என்று கூறி நான் தொலைபேசி துண்டித்துவிட்டேன்
உலகம் இப்படித்தான் மோசம் போகின்றது – மோட்சத்துக்கு வழி தெரியாமல்
பாவம் – யார் யாரையோ பற்றியெல்லாம் எழுதத் தெரிந்தவர்க்கு சுத்த ஞானி வள்ளல் பெருமானை பற்றி எழுத வில்லை – இது அவர் செய்த துர்பாக்கியம்
இது ரஜினிக்கும் இளையராஜாவுக்கும் பொருந்தும்
வெங்கடேஷ்