On a lighter note – part 33

On a lighter note – part 33

ஒருவன் தன் உடல் எடை அதிகம் காரணமாக – ஓடாத சைக்கிளை ஓட்டிப் பார்த்தான் – தினம் நடைப்பயிற்சி செய்து பார்த்தான்
ஒரு பருப்பும் வேகவில்லை

அதனால் டாக்டரிடம் சென்றான் – உடல் எடையை குறைக்க வழி சொல்லுமாறு கேட்டுக்கொண்டான்
அவன் உணவை விட நொறுக்குத் தீனிகள் அதிகம் உண்பான்

அவர் சிரித்து – நான் ” உனக்கு வித்தியாசமான ட்ரீட்மெண்ட் கொடுக்கப் போகின்றேன்” என்றார்

அவர் அவனிடம் ஒரு கவர்ச்சியான பெண்ணின் படம் கொடுத்து , இதை உனது ஃப்ரிட்ஜில் ஒட்டிக்கொள் என்றார்
எப்போதெல்லாம் உனக்கு சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதோ , அப்போது ஃப்ரிட்ஜ் திறந்தவுடன் இந்தப் பெண் படம் பார்த்தவுடன் , இந்த படத்தின் பெண் போல் ஒல்லியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தினால் , நீ சாப்பிடாமல் இருப்பாய் – அதனால் உன் எடை குறையும் என்றார்

ஒரு மாதம் கழித்து வந்து பார் என்றார்

ஒரு மாதம் கழித்து சென்று பார்த்தபோது – டாக்டர் என்ன எடை கூடிவிட்டது -2 கிலோ ஏறிவிட்டது என வினவினார்

அவன் – டாக்டர் நான் அந்த பெண்ணின் கவர்ச்சிப் படம் பார்க்க வேண்டும் என்பதுக்காகவே அடிக்கடி குளிர்சாதனப் பெட்டி திறந்து திறந்து பார்த்து , பின் நாக்கை அடக்க முடியாமல் அதிகம் உண்டுவிட்டேன் என்றான்

டாக்டர் – உன்னை கடவுள் தான் காப்பாற்ற முடியும் என்றார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s