அகத்தியனும் – திருமூலரும் – உண்மை விளக்கம்
1 அகத்தியன் என்றால் உலகத்தவர் அனைவரும் ஒரு குள்ளமான ஞானி – குறுமுனி தான் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்
உண்மை அதுவல்ல –
அவர் ” அகத்தில் இருக்கும் தீ ” ஆகிய ஆன்மா ஆவார்
உலகில் எங்காவது கட்டை விரல் உயரத்தில் ஒரு மனிதர் இருக்க முடியுமா ?? யோசிப்பீர் உலகீர்
ஆன்மா கட்டை விரல் உயரத்தில் நெற்றி நடுவில் சுடர் விட்டுக்கொண்டிருக்கின்ற படியால் , அவர் குறுமுனி ஆகச் சித்தரிக்கப்பட்டார்
அகத்தியன் = மனிதர் அல்லர் – அவர் ஆன்மாவின் தத்துவ விளக்கம் ஆகும்
2 திருமூலர் என்றால் திருமந்திரம் எழுதியவர் என்று மனதில் பதிந்துள்ளது
அவர் மனிதர் அல்லர் – அவர் மூலமாகிய 2 புருவ மத்தியில் தோன்றும் மூலாக்கினி – மூலக்கனல் ஆவார்
அவர் குரு நந்தி எனில்
நந்தி = நம் + தீ – அதாவது அவர் தம் குரு கண்ணில் இருக்கும் தீ ஆகிய திருவடி ஆகும்
இவர்கள் பெயரில் மற்ற யோகியரும் ஞானியரும் நூல்கள் உலகத்துக்கு அருளியிருப்பர்
வெங்கடேஷ்