திருமந்திரம் – குருவின் பெருமை

திருமந்திரம் – குருவின் பெருமை விளக்கினை யேற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே   கருத்து : இந்த மந்திரப் பாடல் சற்றுக் குழப்பமானதாக தோன்றும் ஆன்மாவாகிய விளக்கை ஏற்றி இறையாகிய வெளியை அறிந்துகொள்ளுங்கள் தீப விளக்கு முன்பு நாம் கண் தவம் செய்தால் நம் வேதனைகள் – துன்பம் – துயரம் யாவும் நீங்கும் அறவாழி அந்தணன் தாள் சார்ந்தார்க்கல்லால் மனக்…

திருமந்திரம் – இறையின் கிருபை

திருமந்திரம் – இறையின் கிருபை பிறவா நெறிதந்த பேரரு ளாளன் மறவா அருள்தந்த மாதவன் நந்தி அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன் உறவாகி வந்தென் உளம்புகுன் தானே கருத்து : தனக்கு மீண்டும் இந்தப் புவியில் பிறக்க வேண்டா நிலை தந்த பெரிய அருள் கொண்டவன் – தன்னை மறக்காதிருக்க வைத்த பெரிய தவ நந்தி தர்மம் தழைத்தோங்கும் அந்தணன் – ஆதியான, பரவெளியில் இருக்கும் தெய்வம் எனக்கு உறவாகி வந்து , என் உள்ளம் –…

திருமந்திரம் – சிவயோகியர் தம் நிலை

திருமந்திரம் – சிவயோகியர் தம் நிலை சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர் சத்தமும் சத்தமுடிவும் தம்முள் கண்டோர் நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர முத்தர்தம் முத்தி முதல் முப்பத்தாறே   கருத்து : சிவலோகம் ஆகிய பரசிவ வெளியை தம்முளே தரிசித்தோர் – நாதமும் கண்டு , நாதாந்தமும் தம்முள் கண்டோர் 1 நித்தியர் – என்றும் நிலையாக இருப்பவர் ஆவர் 2 நிமலர் – மலம் நீங்கியவர் ஆவர் 3 நிராமயர் ஆவர் 4 பரமுத்தர்…

திருமந்திரம் – சிவம் ஆன்மாவில் கலத்தல்

திருமந்திரம் – சிவம் ஆன்மாவில் கலத்தல் அறியகிலேன் என்று அரட்டாதே நீயும் நெறிவழியே சென்று நேர்பட்ட பின்னை இரு சுடராகி இயற்ற வல்லானும் ஒருசுடராகி வந்துஎன் உள்ளத்துள் ளாமே   கருத்து : எனக்கு வழி – முறை – தெரியவில்லை என்று புலம்பாதே குரு காட்டிய வழியில் பயிற்சி செய்து – அனுபவத்துக்கு வந்த பின் , கண்களில் இரு சுடராக – சூரியசந்திரனாக இருந்து அருளிய இறை, இப்போது ஒரு சுடராக ஏக ஜோதியாக…

திருமந்திரம் – தவத்தின் பெருமை – சிவ ஞானியர் வல்லபம்

திருமந்திரம் – தவத்தின் பெருமை – சிவ ஞானியர் வல்லபம் தூங்கிக் கண்டார் சிவலோகமுந் தம்முள்ளே தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம்முள்ளே தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்முள்ளே தூங்கிக் கண்டார் நிலை சொல்வ வ்வாறே. கருத்து : தூங்கி = உறங்குதல் அல்ல – தவம் செய்தல் ஆகும் தூங்காத தூக்கம் தவம் ஆகும் இவ்வாறு தவம் செய்து 1 தம்முள் ,தன் ஆன்மாவினுள் இருக்கும் சிவபூமியாக – வெளியாகிய சிவ லோகம் கண்டார் 2 தூங்காமல்…