” ராம ” நாமம் – சன்மார்க்க விளக்கம்
இது தாரக மந்திரம் ஆகும்
இதை பலர் இதன் அருத்தம் தெரியாமல் – ” ராம ராம ” என்று ஜபித்துக் கொண்டிருப்பர் – ராமாயணக் காவிய ராமனை குறிப்பதாக எண்ணி
ஆனால் உண்மை அதுவல்ல
ராம என்பது திறத்தலும் மூடுதலும் உடைய சுழிமுனை நாடியின் நுழை வாயிலைக் குறிக்கும்
” ராம ” என்று மூடியிருக்கும் இந்த நுழைவாயில் திறக்க வேண்டும் என்பதுக்காக சொல்வதாகும்
சூரிய சந்திரர் சேர்ந்தது தான் ராம நாமம்
ரா – ரவியின் சுருக்கம்
ம – மதி சுருக்கம்
அதாவது சூரிய சந்திர கலைகள் ஒன்று சேர்ந்தால் சுழிமுனை வாசல் திறக்கும் என்ற பொருள் பட இம்மந்திரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
இந்த இடத்தில் தான் அனுமன் ஆகிய வாசி உள்ளது உண்டாவதும் ஆகும்
அதனால் இதை சதா காலமும் உச்சரித்த படி இருப்பதாக இதிகாசம் கூறுது
வெங்கடேஷ்