திருவிளையாடற் புராணம் – கதாபாத்திரங்கள் தத்துவ விளக்கம்
திருவிளையாடற் புராணம் – தக்ஷ வதம்
தக்ஷன் = ஜீவ போதம் – இது சதா அசைந்து கொண்டிருக்கும் தன்மை உடையது – உடல் – மனம் – பிராணன் யாவும் சதா அசைந்து கொண்டிருக்கும்
அவனை வதைத்தது = இந்த அசைவை நிறுத்தியது ஆகும்
ஆட்டுத் தலை வைத்தது = அசையா நிலை கொடுத்தது ஆகும் – ஆட்டின் கண் அசையாமல் இருப்பது போல் , உடல் , மனம் , கண் யாவும் கட்டுரையற்று ஓரிடத்தில் நிற்பது ஆகும்
இதைச் செய்தது சிவம் அனுப்பிய வீரபத்திரன் = சாதனத்தில் வரும் ஒளி ஆகும் – இது அசைவை நிறுத்தி விடும்
வள்ளல் :
” ஆடாதீர் சற்றும் அசையாதீர் “என்று அறிவுறுத்துகின்றார்
சன்மார்க்கத்தவரே – எங்கே புராணம் தவறாக வழி காட்டுகின்றது ?? சொல்லுங்கள்
புராணமும் அசைவை ஒழியுங்கள் என்று சொல்கின்றது – அதுக்கு வழியும் சாதனமும் சொல்கின்றது
உங்களுக்குத் தான் இதன் பெருமை அருமை தெரியவில்லை
வெங்கடேஷ்