சடங்கும் உண்மை விளக்கமும்
நாம் கோவிலில் தெய்வத்தை , அனேகர் தம் இருகரம் கூப்பி வணங்கி , பின் அந்த இரு கரங்களையும் தம் சிரசுக்கு மேல் எடுத்துச் சென்று வணங்குவதைப் பார்த்திருப்போம்
இதன் உட்பொருள் :
இருகரம் கூப்புதல் = இரு திருவடிகள் இணைத்தல் குறிக்கும் – கண்ணில் இருக்கும் திருவடிகள் சாதனாதந்திரத்தால் இணைத்தல் ஆகும்
இரு கரமும் சிரசுக்கு மேல் எடுத்துச் செல்லல் = திருவடியை ஆன்மாவுக்கும்/ அதினுள் இருக்கும் திருச்சிற்றம்பலத்துக்கு மேலேற்றல் குறிக்கும்
நம் அறிவில் சிறந்த முன்னோர் எல்லா விஷயத்தையும் வழிபாட்டில் கொண்டுவந்துவிட்டனர் – அவர்கள் தம் அனுபவத்தை சடங்காக்கி விட்டனர் என்பது உண்மை
நாம் வெறும் சடங்காக மட்டும் பார்த்து , அதன் உட்பொருளை காற்றில் பறக்க விட்டுவிட்டோம்
வெங்கடேஷ்