On a lighter note – part 52
உண்மைச் சம்பவம்
கோவை – பெ நா பாளையம்
நான் பிரிக்காலில் பணியாற்றிக்கொண்டிருந்த போது நடந்த சம்பவம்
நான் என் நண்பரின் வீட்டுக்கு மாலையில் சென்றிருந்தேன்
அவர்கள் குடும்பம் ஏதோ கல்யாண வரவேற்புக்கு செல்ல தயாரிகிக்கொண்டிருந்தனர்
அவன் மனைவி காது தோடு அணியும் அவசரத்தில் அதன் திருகாணி கீழே விழுந்து எங்கோ ஒளிந்து கொண்டது
எல்லோரும் தேடினர் – நானும் தேடினேன்
எல்லோரும் எங்கே விழுந்ததோ அந்த இடத்தைச் சுற்றி தேடிவந்தனர்
அவன் அப்பா மட்டும் வேறெங்கோ தேடினார்
என் நண்பன் : அப்பா ஏன் எங்கோ தேடுகின்றீர்கள் ??? – அங்கே தான் விழவில்லையே என்றான்
அவன் அப்பா : இங்கே தான் வெளிச்சம் அதிகமாக இருக்கின்றது அதான் இங்கே தேட்றேன் என்றார்
வெங்கடேஷ்