மனம் – மனனம்

மனம் – மனனம் மனம் = எண்ணமிலா நிலை – குணம் மனனம் = சதா எண்ணும் நிலை – குணம் மனம் , மனனம் என்னும் குணம் அடைந்தால் , அது இக வாழ்வுக்கு வழி கோலும் மனனம் என்னும் குணத்தை இழந்து மனம் என்னும் நிலையில்/குணத்தில் நின்றால் அது பரத்துக்கு  வழிகாட்டியாக இருக்கும் மனம் தெய்வ அனுசந்தானத்துக்கும் , பர சாதனைக்கும் மிகவும் அவசியமாகின்றது இது தான் மனம் – மனனம் வேறுபாடு வெங்கடேஷ்

திருமந்திரம் – சுத்த சிவத்தின் பெருமை

திருமந்திரம் – சுத்த சிவத்தின் பெருமை கடங்கடன் தோறும் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத் தடங்கிட நின்றதும் அப்பரி சாமே கருத்து : மண் பானையில் உள்ள நீரில் கதிரவன் நிழல் தோன்றுகின்றது – அதை மூடிவிட்டதால் கதிரவன் – சூரியன் அதில் அடங்காமல் நிற்பான் – அதில் அடங்கிவிட்டதாக கருதுவது முட்டாள் தனம் போல் ஆலம் உண்ட கண்டனாகிய சுத்த சிவமும் இந்த உடலில் அடங்கியிருப்பதாக கருதுவது…

திருமந்திரம் – தன் குரு நந்தி பெருமை போற்றல்

திருமந்திரம் – தன் குரு நந்தி பெருமை போற்றல் ஆகின்ற நந்தி யடித்தா மரைப்பற்றிப் போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும் ஆகின்ற ஆதார மாறா றதனிமேற் போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே கருத்து : நந்தி இணையடியை – தாமரை அடியை நான் போற்றிப்பூசிப்பேன் ஆறாதாரம் மேல் நிற்கும் இணையடியை – பொற்பாதங்களை நான் போற்றுவேனே வெங்கடேஷ்

திருமந்திரம் – ஆன்மா – பரமான்மா உறவு

திருமந்திரம்  – ஆன்மா – பரமான்மா உறவு இவனில்ல மல்ல தவனுக்கங்கு இல்லை அவனுக்கும் வேறில்லம் உண்டா அறியின் அவனுக் கிவனில்லம் என்ற றிந்தும் அவனை புறம்பென் றரற்றுகின் றாரே கருத்து : இவன் = சுத்த சிவம் அவன் = ஆன்மா சிவத்துக்கு இந்த உடலில் இருக்கும் ஆன்மா அல்லாது வேறு இல்லம் – வீடு – இருக்கும் இடம் கிடையாது சிவத்துக்கு இந்த ஆன்மா தான் வீடு – வசிக்கும் இல்லம் என்று அறிந்த…

திருமந்திரம் – அமுதம் பெருமை கூறல்

திருமந்திரம் – அமுதம் பெருமை கூறல் மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம் ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது பேணிக்கொண் டுண்டார் பிறப்பற் றிருந்தார்கள் ஊணுக் கிருந்தார் உணராத மாக்களே கருத்து : சந்திர மண்டலத்தில் ஆணிப்பொன்னம்பலத்தில் ( ஆணிப்பொன்னம்பலம் என்பது பொன்னம்பலம் விட உயர் மாற்றுடைய – உயர்ந்த பொன்னிற ஒளி உடைய வெளி – உயர் நிலை வெளி ஆகும் ) இருந்து ஊறி வரும் அமுதத்தை உண்டவர்கள் பிறப்பில்லா நிலை அடைந்தார்கள் உணவே கதி…

திருவாசகம் – தெய்வத்தின் பெருமை கூறல்

திருவாசகம்  – தெய்வத்தின் பெருமை கூறல் வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யானெனதென்று அவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே கருத்து : ஆகாயமாகவும் , மண்ணாகவும் , காற்றாகவும் , அக்கினியாகவும் , உடலாகவும் , உயிரான பிராணனாகவும் , சத்தியமாகவும் , ஒன்றும் இல்லாததாயும் , தலைவனாக நான் எனது என்று ஒவ்வொருவரையும் ஆட்டி வைப்பவனாய் நிற்கும் உன்னை என்ன சொல்லி வாழ்த்துவதென்று ?? என…

என் அனுபவங்கள் – பாகம் 7

என் அனுபவங்கள் – பாகம் 7 1 நான் கண்ணில் இருக்கும் திருவடி வைத்து சாதனம் செய்யுங்கால் , இரு புருவ மத்தியில் “நீல ஒளி ” தோன்றும் – அதில் மனம் லயிக்கும் சாதனம் தீவிரம் அடைய அடைய அதன் அடர்த்தி அதிகமாகி நன்கு ஒளிர்விடும் – அப்போது அதைப் பார்ப்பதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் அதிலேயே நம் கவனம் இருக்கும் 2 இந்த மேற்படி பயிற்சி செய்யும் போது , கண்ணில் இருந்து கண்ணீர்…

மதமாற்றம் எப்படி நடக்கின்றது ??

மதமாற்றம் எப்படி நடக்கின்றது ?? உண்மைச் சம்பவங்கள் நான் சௌராஷ்டிரா வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவோம் 1 சென்ற வருடம் என் மனைவியின் உறவினர் வீட்டுத் திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தேன் அவர்கள் கிறித்துவ மதத்துக்கு மாறியது எனக்குத் தெரியும் அந்தப் பெண்மணியிடம் அப்படி இந்து மதத்தில் இல்லாதது கிறித்துவ மதத்தில் என்ன கண்டீர்கள் என கேட்டேன் ?? அதில்லை மாப்பிள்ளை – ” எனக்கு நிறைய பிரச்சினைகள் வாழ்வில் – அப்போது கிறிஸ்து தான் வந்து உதவினார் –…