திருமந்திரம் – அமுதம் உற்பத்தி செய்யும் வகை அறிவித்தல்
அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற்
குமிழிக் குட்சுட ரைந்தையும் கூட்டிச்
சமையத்துண் டோட்டித் தரிக்க வல்லார்க்கு
நமனில்லை நற்கலை நாள்இல்லை தானே
கருத்து :
எப்போது அமுதம் ஊறும் ??
எப்போது விந்துவுடன் ஐந்து இந்திரியங்களின் ஒளிகளையும் ஒன்றாக்கி , அதை சிரசுக்கு ( சுழிமுனை உச்சி ) ஏற்றிச் செல்கின்றார்களோ , அப்போது அது சுரக்கும்
அப்போது நமக்கு காலன் என்னும் வியாதி இலை – நாள் நட்சத்திரம் – ஹோரை – நல்ல நேரம் காலம் பார்க்க அவசியமில்லை
வெங்கடேஷ்