புத்தர் ஞானம் அடைந்தது – உண்மை நிலவரம் என்ன ??

புத்தர் ஞானம் அடைந்தது – உண்மை நிலவரம் என்ன ??

புத்தர் ஞானம் எல்லாம் அடையவில்லை – மாறாக மரணமடைந்தார்

ஆம் – அவர் food poisoning ஆல் – உணவு விஷமானதால் மரணமடைந்தார்

இதை பாரதி கவி
‘” நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர் ” என்ற வரியால் நிரூபிக்கப்பட்டுள்ளது

அவர் சமாதி அடையவில்லை
அவர் தத்துவ நிர்வாணம் அடையவில்லை ( ஜைனர்கள் – மகாவீர் அடைந்தது போல் )
அவர் 36 தத்துவங்களைக் கடக்கவில்லை
அவர் ஆன்மாவை தரிசிக்கவில்லை – ஆன்ம அனுபவம் பெறவில்லை

அவர் அடைந்த ஞானம் என்னவெனில் – அவர் பெற்ற தெளிவினைக்குறிக்கின்றது

அவர் தம் முயற்சியினால் – தன்முனைப்பினைக்கொண்டு சாதனம் பயின்று பயின்று , பருப்பு வேகாமல் போகவே மிகவும் நொந்து போனார் – சலிப்பும் உற்றார் – மிக்க வேதனை அடைந்தார்
ஊர் ஊராக சுற்றி வந்து , இறுதியில் போதி மரத்தடி அடைந்தார்
அங்கு அவர்க்கு ” தன்முனைப்பு ஒழிய வைக்கப்பட்டும் , தன் முயற்சி ஒழிக்கப்பட்டும் சாதனம்/ தவம் தானாகவே நிகழ்ந்தது – அவர் முயற்சியின்றியே தவம் நடந்தது – அவர்க்கு நிட்டை கூடியது ”

அவர் இதைத் தான் ” தான் அடைந்த ஞானம் ” என்று பேசுகின்றார் – இது இவர் சாதனம் பற்றி பெற்ற தெளிவு ஆகும் தானே தவிர ஞானம் அல்ல – மக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை

இதை நம் சித்தர் பெருமக்களும் வேத ரிஷிகளும் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டனர் – ” சும்மா இரு – எல்லாம் தானாகவே நடக்கும் ”

இவர் என்ன புதிதாக சொல்வதுக்கு இருக்கின்றது ?? என்னமோ இவர் தான் இன்று தான் புதிதாக கண்டுபிடித்தது போல் – யாரும் சொல்லாததை சொல்லிவிட்டதாக எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்

பின்னர் இதை மிகப் பிரபலப்படுத்தினார்

இவர் வழி தனி வழியென

“ Witnessing is the Way “

“ Vipaassana the Way of the Buththa” என்று உலகம் முழுதும் பரப்பப்பட்டது

இதெல்லாம் நம் முன்னோர்கள் – பழம் தின்று கொட்டை போட்டாயிற்று – இவர் கூறியதை புதிதென நம்பி இலங்கை – சீனம் – ஜப்பான் நாடுகள் இவரைப் பின்பற்றுகின்றன – பாவம் இவர்கள்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s