மனம் செய்யும் சேட்டைகள் – மனம் ஒரு வியாபாரி

மனம் செய்யும் சேட்டைகள்

மனம் ஒரு வியாபாரி மாதிரி – முட்டை கணக்குப் போடும் வியாபாரி

ஒரு கோழி இருக்கின்றது – இன்று 3 முட்டை இடுகின்றதென வைத்துக்கொள்வோம்
உடனே மனம்
ஒரு நாள் = 3 முட்டை
ஒரு மாதம் = 90
ஒரு வருடம் = 1100 சுமாராக

ஒரு முட்டை விலை 5 ரூபாயெனில் நம் வருமானம் – 1100 *5 = 5500 /=

அப்படியெனில் 10 கோழிகள் வளர்த்தால் , ஆண்டு வருமானம் 55000 /= நாம் சம்பாத்தியம் செய்யலாம் என முட்டைகணக்கு போடும் திறம் கொண்டது

இது எப்படியெனில்

ஒலிம்பிக் போட்டியில்
100 மீட்டர் தங்கம் வென்றவன் நேரம் = 8.5 நொடிகள்
இதையே அடிப்படையாக வைத்து 1000 மீ தூரத்துக்கு கணக்கு போட முடியுமா ?? அது கனவிலும் நிஜத்திலும் நடக்கவே நடக்காது போல் , இந்த மனம் போடும் முட்டை கணக்கும்

100 மீட்டர் வேறு , 1000 மீட்டர் வேறு நேரம் எடுத்துக்கொள்வோம்

ஏன் மனம் இவ்வாறு இருக்கின்றதெனில் – அதுக்கு அறிவென்பது இல்லை – அது ஜடம்

இதுக்கு நாளை என்ன நடக்கும் என்பது தெரியாத போது , ஒரு வருடத்துக்கு கணக்கு போடுவதென்பது மூடத்தனம் ஆகும்
ஆனால் அதை இது உணர்வதில்லை – தன்னிலை உணர்வதில்லை

அதனால் மனம் பின்னால் ஓடக்கூடாது என்பது உண்மை

அறிவாகிய ஆன்மா தான் துணையாக கொள்ள வேணும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s