மனவளக்கலையிலிருந்து சன்மார்க்கத்துக்கு
உண்மைச் சம்பவம் – காஞ்சி எல் & டி – 1999
நான் சன்மார்க்கத்தில் தீக்ஷை வாங்கி சாதனம் செய்து வருவது இங்குள்ள எல்லா தொழிலாளர்க்குத் தெரியும் – அனுபவத்திலிருப்பதுவும் தெரியும்
அதில் அனேகர் ( 15 பேர்) மனவளக்கலையில் சேர்ந்து அங்கு குண்டலினி யோகம் – மற்றும் சில பயிற்சிகள் – காய கல்பம் பயின்றும் வந்தனர்
சிலர் ஆழியார் சென்று பிரம்ம ஞானம் கூட அடைந்துவிட்டனர்??
அவர்கள் என்னிடம் வந்து ” நீங்கள் உங்கள் அனுபவம் சொல்லுங்கள் “என்றனர்
நான் இதுவரை 4 திரைகள் – கருப்பு- நீலம் பச்சை – சிகப்பு வர்ணத்திரைகள் பார்த்துவிட்டேன் – என் கண்ணிலிருந்தும் பல நிற வண்ணங்கள் வந்த வண்ணமுள்ளன என்றேன்
பயிற்சியில் மனம் பாரத்தோடு உட்கார்ந்தால் , வெளிவரும் சமயம் மனம் லேசாகி உணர்கின்றேன் –
” தனக்குவமை இல்லாதான் தாள் சார்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது ”
குறள்
இதை பிரத்யக்ஷமாய் அனுபவித்திருக்கின்றேன் என்றேன்
அவர்களுக்கு வியப்போ வியப்பு – எல்லாம் திருவடியால் சாத்தியம் என்றேன்
பின் அவர்கள் 15 பேர் – சங்கத்துக்கு வந்து குருவை சந்தித்து , பின் ஒரு பௌர்ணமி அன்று தீக்ஷை வாங்கினர்
அதில் சிலர் பயிற்சி செய்கின்றனர்
பெரும்பாலோர் – அருட்பா படித்தும் – அகவல் படித்தும் வருகின்றனர்
ஆனால் ஞாயிறு வகுப்புக்கு ஒழுங்காக வந்துவிடுவர் – இது போதும் எங்கின்றனர்
வெங்கடேஷ்