கும்பாபிஷேகம் ஏன் செய்ய வேணும் ??

கும்பாபிஷேகம் ஏன் செய்ய வேணும் ??

ஒவ்வொரு கோவிலுக்கும் 12 ஆண்டுகள் – இல்லை சில குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப்பின் இது நடைபெறுகின்றது – இது வழக்கம்

இதை ஏன் செய்ய வேண்டும் ??

பாரதக் கதை:
பாண்டவர்கள் போரில் வென்று முடி சூடி , ஆட்சி செய்து வருங்காலம்

ஒரு முறை கண்ணனும் பார்த்தனும் காட்டுக்கு வேட்டையாடச் சென்றனர்
அங்கு எதிர்பாரா விதமாக இவர்க்ளுக்கும் அங்கிருக்கும் காட்டுவாசிகளுக்கும் சண்டை வந்துவிட்டது

வியப்பு என்னவெனில் காட்டுவசிகள் எளிதான விஜயனை தோற்கடித்துவிட்டனர்

அவனுக்கு அவமானமும் சோகமும்

அவன் கண்ணனிடம் கேட்க , பார்த்தா உன் காண்டீபம் செறிவிழந்து – சக்தி இழந்து விட்டது என்றான் மாயன்

இது உண்மை

எந்த ஒரு சக்தியும் சில ஆண்டுகளுக்கு மட்டும் தான் – அந்த காலம் முடிந்தவுடன் அதை மீண்டும் செறிவூட்ட வேண்டியது நம் கடமை ஆகும்

அதைத் தான் நம் முன்னோர்கள் ஒவ்வொரு கோவிலுக்கும் உள்ள தெய்வங்களுக்கு செறிவூட்டும் விழாவாக இந்த கும்பாபிஷேகத்தை நடத்தி அந்த தெய்வத்துக்கு ” சக்தி ” ஊட்டுகின்றனர்

இதில் கலச நீரில் 9 தானியங்கள் – 9 ரத்தினங்கள் ஆன மந்திர நீர் இருக்கும் — அவைகள் அந்த தெய்வத்துக்கு சக்தி – உரம் அளிக்கும்

இதை அகத்தில் கொண்டுவந்தால் , இந்த 9 ஒளிகளையும் – நவ ரத்தின ஒளிகளையும் சுழிமுனை உச்சிக்கு மேலேற்றினால் இந்த தேகம் வலுவடையும் – நீண்ட ஆயுள் கிடைக்கும்

இது தான் கும்பாபிக்ஷேகத்தின் உண்மையான தாத்பரியம்

வெங்கடேஷ்

Leave a comment