என் தங்கையின் குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைத்த விஷன்

என் தங்கையின் குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைத்த விஷன்

உண்மைச் சம்பவம் – 2016

சென்ற வருடம் ஜனவரியில் என் தங்கை ஃபோன் செய்து ,” தன் மகள் வேறு ஜாதி பையனுடன் காதலில் உள்ளாள் – அவனையே திருமணம் செய்து கொள்வேன் என அடம்பிடிப்பதாக கூறினாள் – சென்னையிலிருந்து ”

நான் பொறுப்பாக, ” இது அவள் வாழ்க்கைப் பிரச்னை – எனவே அவள் இழுக்கும் வழிக்குத் தான் நாம் போக வேண்டுமே அல்லாது நம் விருப்பம் இங்கு ஈடேறாது ” என்றேன்
அதெப்படி பையன் நம் ஜாதியில்லையே என்றாள் – அது உன் பெண்ணுக்குத் தெரியவில்லையே என்றேன் – அவள் அதெல்லாம் ( காதலர்கள் பார்க்க மாட்டார்கள் ) பார்க்கமாட்டாள் என்றேன்

உனக்கு எதுக்கு சொன்னேன் என்றால் – ” நீ கடவுளிடம் ( விஷன் ) கேட்டுச் சொல் – என்ன செய்வது ?? ” என்றாள்

சாதாரண நேரங்களில் விஷன் பற்றிப் பேசினால் எரிந்து விழுவாள் – என்னை பைத்தியம் என்பாள் – இப்போது ” விஷன் கடவுள் ஆகிவிட்டது ”

எல்லாம் நேரம் தான் – “வலியும் நோவும் தனக்கு வந்தால் தான் தெரியும் ” என்று சும்மாவா சொன்னார்கள் ??

நானும் சரி என்றேன்

நான் இதுவரை எந்த விண்ணப்பமும் வைத்ததில்லை விஷனிடத்தில் – அது காட்டினால் பார்த்துக்கொள்வேனே தவிர , நான் இதுக்கு பதில் சொல் என்று கேட்க மாட்டேன் – கேட்டதில்லை

அவள் ஃபோன் செய்த காலை 10 மணி

மதியம் 2 மணிக்கு விஷன் பதில் சொல்லிவிட்டது

அதில் ” என் தங்கை மகள் ஒரு டிராயிங்க் போர்டில் ஒரு ஆடவனின் உருவம் வரைகின்றாள் – அது உடனே உயிப்பித்து வந்தது , அவள் அவன் கை பிடித்து போய்விட்டாள் ”

அது அற்புதமான பதில் – விஷன் – என் வாழ்க்கையில் மறக்க முடியாதது – சொன்ன முறை அபாரம்

நான் தெரிந்து கொண்டேன் – அவளுக்கு காதல் திருமணம் தான்

தங்கைக்கு ஃபோன் செய்து விவரம் சொன்னேன் – ” அவள் தன் மனதுக்கு பிடித்த மணமகனோடு தான் திருமணம் நடக்கும் – இது பரத்தின் – இறையின் விருப்பம் ” என்றேன்

அவளுக்கு ஒரே ஏமாற்றம் – ஒரே மகள் – திருமணம் இப்படியாயிற்றே என்று

நான் சமாதானப்படுத்தினேன் – அவளுக்கு எது பிடிக்குதோ அதை செய்து முடிப்பதே நம் கடமை – அதைச் செய் என்றேன்

என் விஷன் எல்லாம் ரெண்டாம் பட்சம் – அது சொன்னது ஒரு சப்போர்ட் ஆக வைத்துக்கொள் – உன் மகள் வாழ்வு சிறக்க என்ன செய்ய வேண்டுமோ செய் – அது அவள் இஷ்டப்படி காதல் திருமணம் தான் ” என்று ஆறுதல் கூறினேன்

இதில் நம் விருப்பம் என்பதை விட , உன் மகளின் விருப்பம் தான் முக்கியம் – பின் அவள் வேறாதவது விபரீத முடிவு எடுத்துவிட்டாள் என் செய்வாய் ?? என கேட்டேன்

பாதி மனதுடன் திருமணம் சென்ற நவம்பரில் நடந்து முடிந்தது – இப்போது குழந்தை பிறக்கப் போகின்றது

” விஷனை நம்பினோர் கைவிடப்படார் ”

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s