” கோவை சாந்தி கியர்ஸ் ” செய்யும் மகத்தான மக்கள் சேவை
SSS – Shanthi Social Services சிங்கா நல்லூரில் இயங்கி வருகின்றது
இங்கு காலையிலிருந்து இரவு வரை சிற்றுண்டி – மதிய உணவு – மாலை நொறுக்ஸ் – இரவு உணவு வழங்குகிறனர்
எல்லாமே மிக மலிவான விலையில்
2 இட்லி = 5 ரூ
தோசை = 10 ரூ
உணவு = வெறும் 20 ரூ
காபி/டீ = 5 ரூ
அதிலும் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து , தண்டப்பொருளான மைதாவை எதிலும் கலப்பதில்லை – பூரி சப்பாத்தி – தேங்காய் பன் எல்லாம் கோதுமையில் செய்தவை தான்
உப்புமா கூட கோதுமை ரவையில் தான்
சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை தான் பயன்படுத்துகின்றனர்
மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது
இங்கு சிறுவர்களுக்கான பொழுது போக்கு பூங்காவும் உள்ளது – ஞாயிறன்று கூட்டம் அதிகமாக இருக்கும்
மாலை – சுண்டல் – பச்சைப்பயறு வகைகள் கிடைக்கும்
சிலர் வீட்டுப்பார்சல் வாங்கிச்செல்வதைப் பார்க்கலாம்
ஷாந்தி கியர்ஸ் செய்யும் மகத்தான மக்கள் சேவை ஆகும் இது
மேலும் மருத்துவ பரிசோதனை கூட மலிவான விலையில் செய்கின்றது ஷாந்தி
petrol அளவு சரியாக இருக்கின்றதென இவர்கள் நடத்தும் பங்க்கில் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்
கோவையை கொள்ளை அடித்துக்கொண்டிருக்கும் ” அன்னபூர்ணா – கௌரி ஷங்கர் – ஆனந்தாஸ் – அடையாறு ஆனந்த பவன்” மத்தியில் ஷாந்தி கியர்ஸ் செய்யும் மக்கள் சேவை பாராட்ட வேண்டியது அவசியம் ஆகும்
வெங்கடேஷ்