முதல் பிறவி – வினைத்தொகை எங்கே – எப்படி ??

முதல் பிறவி – வினைத்தொகை எங்கே – எப்படி ??
( இந்த பதிவு திரு பத்மனாபன் நல்லுசாமி , கரூர் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக இருக்கும் )

இக்கேள்வி 1998 முதல் என் மனதில் இருக்கிறது – இது சங்கத்தில் வைத்தும் விவாதிக்கப்பட்டுள்ளது – ஆனால் பதில் கிடைத்தபாடில்லை

இப்போது சிறிது ஒளி கிடைத்துள்ளது – அது தான் இந்த பதிவும் – பகர்வும் கூட

விலங்கின பிறவியில் கூட நமக்கு வினைகள் இருக்கின்றன – அதனால் தான் ஒரு எலி சிவத்தின் கோவிலில் இருந்த தீபத்தின் திரியை எதேச்சையாக மிகப்பிரகாசமாக எரியச் செய்ய , அது அடுத்த ஜென்மத்தில் இந்த புண்ணியத்துக்காக , அரசனாக பிறந்ததாக புராணங்கள் சொல்கிறது

நாமும் சில விலங்குகள் நோயினால் அவத்தைபடுவதைப்பார்ப்போம் – நாய்கள் காலில்லாமல் நொண்டி நொண்டி நடப்பது பார்த்திருப்போம்

இப்போது ஒரு யானை காலில் கட்டியால் , நடக்க முடியாமல் போக , மருந்து செலுத்தி இருக்கிறார்கள் – அறுவைசிகிச்சை செய்யப்போகிறார்கள்

ஆக வினைகள் என்பது விலங்கின பிறவியில் இருந்தே இருக்கிறது என்பது தெரிகிறது

முதல் பிறவியில் வினைகள் எங்கே இருக்குது ??

இதுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் , ஒரு உதாரணத்தால் தான் விளக்க முடியும்

ஒருவன் , முதல் முதலில் வேலைக்குப்போய்ச் சேர்கிறான் – அந்த மாதம் முழுதும் வேலை செய்த பிறகுதான் சம்பளம் வரும் – அது வரையில் செலவுக்கு எப்படி ??

அவன் தாய்தந்தையர் கொடுக்கின்றார் – உணவு – உடை – போக்குவரத்து – இருப்பிடம் எல்லா செலவுகளையும் அவர்கள் ஏற்றுகொண்டு செய்வது போல், முதல் பிறவியில் ஒருவன் பெற்றோரின் வினைகள் – பாவபுண்ணியங்கள் பாகம் இவனுக்கு வந்து , அதை அனுபவித்து வரும் வேளையில் , அந்த ஜென்மத்தில் செய்யும் வினைகள் சேர்ந்து கொண்டே வரும் – இப்போது வினைக்கூட்டம் சேர ஆரம்பிக்கிறது

இப்படி இருக்கலாம் என்பது என் யூகம் – என் அனுமானம்

மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவிக்கலாம் – விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன

ஆகையால் முதல் பிறவி வினையிலா பிறவி – அப்போது இருந்து வினை சேகரிக்க ஆரம்பம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s