சாதகனும் சாமானியரும் – பாகம் 2
உலக வழக்கில் தரித்திரம் என்றால் செல்வம் இல்லாமை – ஏழ்மை – சோம்பல் குறிக்கும்
ஆனால் ஞான சாதகனுக்கு ” சோம்பல் – நரை – திரை – மூப்பு – பிணி – சாக்காடு” தான் தரித்திரங்கள் ஆகும்
அதனால் இந்த அறிகுறிகள் தோன்றும்முன்னரே ஞான சாதனை முடித்து ஞானம் ஆன்மாவை அடைந்துவிட வேண்டும்
பின் எப்படி இந்த தரித்திரத்தை வெல்வது ?
உலக வழக்கில் தரித்திரம் போக்குவது என்றால் செல்வம் ஈட்ட வேண்டும் – வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும்
ஆனால் ஞான சாதகனுக்கு செல்வம் என்றால் அது ” விந்து ” தான் – அது தான் அவனுக்கு ” மகத்தான செல்வம்”
ஆனால் ஞான சாதகனுக்கு ” சோம்பல் – நரை – திரை – மூப்பு – பிணி – சாக்காடு” என்கிற தரித்திரங்கள் போக்கும் ஒரு அருமருந்து ஒன்றுண்டு – அதுதான் ” விந்து ”
இதை வள்ளல் பெருமான் ” ஞான மருந்து – நல்ல மருந்து ” என்றெல்லாம் விளிக்கிறார்
இந்த மருந்தை சரியான படி பிரயோகித்தால் இந்த தரித்திரங்கள் சாதகனை அணுகா
பிரயோகிக்கும் முறை வழி துறைகள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது
வெங்கடேஷ்