திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

கருத்து – சாதாரணம் ;

யார் எந்த கருத்தை சொன்னாலும் அதன் உண்மைப்பொருளை காண்பது தான் அறிவாகும்

சன்மார்க்க விளக்கம் : யார் எந்த கருத்தை சொன்னாலும் அதன் உலகம் ( கல்வி ஞானியர் , பண்டிதர்கள் ) கூறும் உண்மைப்பொருளை காண்பது விடவும் மெய்ஞ்ஞானியர் கூறும் அனுபவ ஞான விளக்கம் காண்பது தான் அறிவாகும்

உதாரணம்

உலக வாழ்வில்
உயர்ந்தவர் தாழ்ந்தவர்
பணக்காரர் வறியவர்
மேலோர் கீழோர் ஆக
என்றுமே இரண்டாக
உலகம் இருப்பது போல்
முன்னோர் கூறிச் சென்ற
முத்தான பாடல்களிலும் தத்துவங்களிலும்
சாதாரண விளக்கம் ஒன்றாகவும்
உயர் ஞான உண்மை விளக்கம்
மற்றொன்றாகவும் விளங்கி வரும்

சாதாரண விளக்கங்கள்
பண்டிதர்களாலும் வித்துவாங்களாலும் கூறப் பெற்றும்
உண்மை ஞான விளக்கங்கள்
அகமுக அனுபவத்தில் திளைத்த ஞானிகளாலும்
மறை பொருளை தொட்டு உணர்த்தக் கூடிய
சற்குருக்களாலும் கூறப் பெற்று விளங்கும்

சரியை கிரியை யோகம் ஞானம்

இவற்றின் சதாரண விளக்கங்களாக
சரியை எனில்
திருக்கோவிலில் சுத்தம் செய்தல் மெழுகிடுதல் எனவும்

கிரியை எனில் ஒரு மூர்த்தியை வழிபடல் எனவும்

யோகம் எனில் இயம நியமாதிகள் குறிப்பிட்டும்

ஞானம் எனில் சமாதி அடைதல் எனவும் கூறுவர்

உயர் நிலை விளக்கமாக
சரியை என்பது
36 தத்துவங்களைக் கடந்து நிற்பது எனவும்

கிரியை என்பது
அருளுடன் கலந்து பிரியாதிருப்பது எனவும்

யோகம் என்பது
தற்போதம் முழுதும் ஒழிப்பது எனவும்

ஞானம் என்பது
தான் அவனாகும் ஞானானந்தம் பெறுவது எனவும் விளங்கும்

அறம் பொருள் இன்பம் வீடு –

இகத்தின் பொருளாக

இரக்கம் கருணை – தானம் தருமம்

உலக வாழ்வில் ஈடுபடல் – அறமாகவும்

அற வழியில் செல்வம் ஈட்டுதல் பொருளாகவும்

வினக்கீடாக போகம் அனுபவிப்பது
பெண்கள் போகம் இன்பமாகவும்

மோட்சத்திற்கு தன்னை தயார்படுத்துதல் வீடாகவும் நிற்க

மேலான பரத்தின் பொருளாக
தேகத்தில் சிவதரிசனமே அறமாகவும்

தேகத்தின் கண் மறைந்துள்ள
ஞானச் செல்வங்களை வெளிப்படுத்தி
தன் வயப்படுத்தலே பொருளாகவும்

சாதகன் சதா ஆனந்தத்தில் திளைத்திருத்தலே இன்பமகாவும்

பிரணவத்தை அமைத்து அதில் உறைதலே வீடாகவும் விளங்கும்

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s