திருமந்திரம் – பிரணவம்
திருமந்திரம் – பிரணவம் பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு வாய்ந்துகொள் ஆனந்த மென்னும் அருள்செய்யில் வேய்ந்துகொள் மேலை விதியது தானே கருத்து : ஐந்து இந்திரிய சக்திகளையும் , அதன் ஒளிகளையும் ஒன்று சேர்த்து , பிரணவத்தில் கட்டி வைக்க வேண்டும் இது கொண்டு பிரணவம் அமைக்க வேண்டும் அமைத்தால் ஆனந்த அனுபவம் கிட்டும் வெங்கடேஷ்