திருமந்திரம் – காலனை ஜெயிக்கும் தந்திரம்
மூல நாடி முகட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பீர்காள்
மேலை வாசல் வெளியுற கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே
கருத்து :
சுழுமுனை நாடியின் உச்சியினுள் , கண் காது மூக்கு வாய் ஆகிய இந்திரியங்களின் வாசல் நடுவில் உங்கள் சித்தம் நினைவு வைத்து இருந்தீர்களானால் , சுழுமுனை வாசல் திறக்கும் , அது திறந்து எல்லாம் வெளியாக இருப்பது என்ற அனுபவம் வாய்த்த பின் , காலன் என்பது நம் கனவிலும் இல்லை
சுழுமுனை நாடி திறந்து வெளி அனுபவம் சித்தித்துவிட்டால் , நாம் காலனை ஜெயித்துவிடலாம் – ஏனெனில் சுழுமுனை உச்சி என்பது காலம் – கோள்கள் கடந்து நிற்கிறது
வெங்கடேஷ்