ஆன்ம தரிசனம் – வினைக்கழிவு – மரணவாதனைக் கழிவு
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
-கந்தரலங்காரம்
கருத்து :
நாள்
கோள்
வினைகள்
எமன்
தான் என்ன செய்யும் , செய்ய முடியும் ??
இரு சிலம்பும் சதங்கையும் தண்டை அணி தாளினைகள் , ஆறு முகமும் , தோளும் என் கண் முன்னெதிரே வந்து நின்றிடில் ??
முருகன் – கந்தன் = ஆன்மா ஆகும்
ஆன்மா முன் வினைகள் , மாயா மலங்கள் , நாள் , கோள்கள் எல்லாம் இல்லை – அது இதையெல்லாம் தாண்டி சுத்தமாக நிற்கிறது
வெங்கடேஷ்
இதில் கடம்பு என சொல்லப்பட்ட கடப்பமலரிற்கு சன்மார்க்க விளக்கம் உள்ளதா? இம்மலரின் வடிவம் நீறுபூத்த நெருப்பு போல் காணப்படுகிறது.
LikeLike
நீறுபூத்த நெருப்பு போல் எனில் மூன்று மலமும் எரிந்து சாம்பலான பின் சாதகன் மீது விழும் அருள் துளிகளாகும்
மலர் = தீ தான் சன்மார்க்க விளக்கம்
LikeLike
நன்றி
LikeLike