திருவாசகம் – திருப்படையாட்சி
சுழுமுனை – நெற்றிக்கண் திறப்பு பின் வரும் அனுபவங்கள்
” கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே.”
கருத்து :
மீன்களாகிய இந்திரியங்களை வலைவீசி பிடிக்கும் சிவம் , சுழுமுனை திறந்து வெளிப்படுமாயில் , நாம் கண்கள் கொண்டு அவன் திருவடிகள் கண்டு மகிழ்வதும் இல்லை – பெண் போகத்தில் ஈடுபாடும் இல்லை – மீண்டும் இந்த மண்ணில் பிறக்க வேண்டிய அவசியம் இல்லை – நாம் அவன் திருவடிகள் வணங்குதுமில்லை என கூறுகிறார் மணிவாசகப்பெருமான்
மேலும் சுழுமுனை திறக்கும் வரையில் திருவடிகள் பயிற்சி – திருவடிகள் இணைப்பு செய்ய வேண்டும் – சுழுமுனை திறந்துவிட்டால் , இந்த திருவடிப்பயிற்சி செய்யும் அவசியம் இல்லை – அவன் திருவடிகள் வணங்கும் அவசியமும் இல்லை என்கிறது இந்தப் பாடல்
சன்மார்க்கத்தவர்கள் திருவடி தவம் செய்யாத போது இந்த பாடல் அவர்களுக்கு இந்த பாடல் அனாவசியமானது
வெங்கடேஷ்